பிசுபிசுத்தது ஊத்தை ராஜனின் ஆர்ப்பாட்டம்!
லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் முன் கடந்த வெள்ளிக்கிழமை ஜனநாயக காங்கிரஸ் தலைவர் ஜெயதேவனுக்கு எதிராக வன்னிபுலிகளின் பஞ்சாயத்து தலைவர் ஊத்தை ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணி பிசுபிசுத்தது. மேற்படி பேரணிக்கு மக்கள் எவரும் செல்லாத நிலையில் ஊத்தை ராஜனும், சீவரத்தினத்தின் புதல்வருடன் அவர்களது குண்டர்படையினர் சிலருமே மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேற்படி ஆலயத்தினை வன்னியில் பலாத்காரமாக பறித்த சீவரத்தினத்தின் முயற்சி ஜெயதேவனின் சட்ட நடவடிக்கையால் சீரழிந்து குற்றப்பணத்துடன் மீண்டும் ஜெயதேவனிடம் ஆலயத்தை வழங்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு சென்ற சீவரத்தினம். மீண்டும் எவ்வாறாவது அவ் ஆலயத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்ற வெறியுடன் தனது குண்டர் படைகளின் உதவியுடன் ஆலயத்தை கைப்பற்றுவதற்கு முயற்சி கொண்டு வருகின்றபோதும் அது சாத்தியப்படப் போவதில்லை என்பதினை இந்த குண்டர் கூட்டம் புரிந்து கொள்ளாமல் மீண்டும் சட்டசிக்கலில் சிக்கி தவிக்கப்போகின்றது என்பதுவே உண்மையென எமது பிரித்தானிய செய்தியாளர் அனுப்பி வைத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
Average Rating