திருமலையில் 500 எக்கர் காணியை சுவீகரிக்க சதி

Read Time:2 Minute, 14 Second

Trincomalee_4திருகோணமலை தென்னமரவாடிப் பகுதியில் உள்ள சுவாமி மலைப் பகுதியில் 500 ஏக்கர் காணியை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் தெரியவருகிறது.

இவற்றில் 1 ஏக்கர் வரை தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்திற்கும் ஏனைய 400 ஏக்கர் வரை பௌத்த பூஜா பூமி திட்டத்தின் கீழ் பௌத்த விகாரைக்கும் ஒதுக்கப்படவுள்ளது.

இதற்கான அளவையிடும் பணி விரைவில் இடம் பெறவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடு பிரதேச செயலக மூடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதே வேளை தென்னமர வடிக்கு அருகில் உள்ள புல் மோட்டையில் உள்ள அரிசி மலை, நாகமலை போன்ற இடங்களில் காணிகள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2 ஆம் திகதி அரிசி மலைக் காணியை அளவிடச் சென்ற அளவை அதிகாரிகளை அளக்க விடாமல் பொது மக்களும் மகாண சபை உறுப்பினர் அன்வர் பிரதேச சபை உப தலைவர் தௌபீக் மற்றும் உலமா சபை பிரதிநிதிகள் அடங்கலாக எதிர்ப்புத் தெரிவித்து தடுத்தனர்.

இவ்வாறே கடந்த 9 ஆம் திகதி புல்மோடடை நாகமலைப் பகுதியில் 500 ஏக்கரை அளவை செய்யச் சென்ற அதிகாரிகளையும் பொது மக்கள் எதிர்த்து தடை செய்திருந்தனர்.

மேலும் தமிழ் கிராமமான தென்னமரவாடி சுவாமி மலைப் பகுதியில் 500 ஏக்கர் நிலத்தை சுவீகரிக்கும் திட்டமும் வெளியாகியுள்ளது.

ஏலவே தென்னமரவாடி மக்களின் வயல்கள் சிங்கள மக்களால் சேகரிக்கப்பட்டு ஏதேச்சாதிகாரமாக செய்கைப் பண்ணப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காரைநகரில் சிவாஜிலிங்கம் ராணுவத்தால் தடுத்து வைப்பு
Next post வவுனியாவில் சூடு பிடித்துள்ள விருப்பு வாக்கு போட்டி! -ஜனநாயக ஒருமைப்பாட்டு மையம்