கூட்டமைப்பு ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற சந்தர்ப்பம் வழங்கியமை தவறு -சம்பிக்க

Read Time:2 Minute, 57 Second

sampikkaவட மாகாணசபைத் தேர்­தலை நடத்தி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு ஆட்­சி­ய­தி­கா­ரத்தை கைப்­பற்­று­வ­தற்­காக சந்­தர்ப்­பத்தை வழங்­கி­யமை அர­சாங்கம் செய்த மாபெரும் அர­சியல் தவ­றாகும் என ஜாதிக ஹெல உறு­ம­யவின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ளார்.

13வது திருத்­தத்தில் காணி, பொலிஸ் அதி­கா­ரங்­களை நீக்கி மற்றும் பாரா­ளு­மன்­றத்தில் முக்­கி­ய­மான பிரே­ர­ணை­களை கொண்டு வரும் போது மாகாண சபை­களின் அங்­கீ­கா­ரத்தை பெற வேண்­டு­மென்­ப­திலும் திருத்­தங்­களை கொண்டு வந்த பின்னர் வட மாகாண சபை தேர்­தலை நடத்­து­மாறும் தெரி­வித்தோம். ஆனால், அதனை அரசு மேற்­கொள்­ளாது வட­மா­காண சபை தேர்­தலை அறி­வித்­தது.

எனவே பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் இருந்து வெளி­யே­றினோம் இது எமது கட்­சியின் முடிவு. வட மாகாண சபை தேர்­தலை நடத்­து­வது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­கத்தின் முடிவு.

இன்று நாம் சொன்­னது உண்­மை­யா­கி­யுள்­ளது. தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தன்­னாட்சி அதி­காரம், வடக்கு கிழக்கு இணைப்பு உட்­பட தனித் தமி­ழீ­ழத்தை ஏற்­ப­டு­த்துவ­தற்­கான அனைத்து விட­யங்­க­ளையும் முன் வைத்­துள்­ளது.

அர­சாங்கம் செய்த மாபெரும் அர­சியல் தவறால் இன்று இன­வாத, நாசி­வாத சக்­திக்கு அதி­காரம் கிடைப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அத்­தோடு படை­யினர் அர்ப்­ப­ணிப்­புடன் பெற்றுக் கொடுத்த வெற்­றியை பின்­னோக்கி நகர்த்தும் நிலையும் ஏற்­பட்­டுள்­ளது.

வட மாகாண சபைத் தேர்­தலை நடத்த வேண்­டா­மென தேசிய ரீதி­யான அமைப்­புக்கள் வலி­யு­றுத்­திய போதும் சர்­வ­தேசம் விசே­ட­மாக இந்­தி­யாவின் கடும் அழுத்தம் கார­ண­மா­கவே அர­சாங்கம் தேர்­தலை நடத்­து­கின்­றது.

புலி­களின் அழி­வுக்கு பின்னர் தமிழ் மக்­களின் அமை­தி­யான வாழ்க்­கையை குழப்­பி­யது இந்­தி­யாவே ஆகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இருவேறு வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு
Next post வடபுலத்தில் இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்; சுரேஸ் பிரேமச்சந்திரன்