இருவேறு வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு

Read Time:2 Minute, 0 Second

accsi.Crash-Genericஅநுராதபுரம் நொச்சியகாமம் மற்றும் தம்புள்ளை பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு பெண் காயமடைந்துள்ளார்.

நொச்சிகாமம், கலயாய சந்தியில் பஸ்சொன்றும், லொறியொன்றும் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும், மகளும் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் தாய் காயமடைந்துள்ளதுடன், அவருடன் இருந்த குழந்தைக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று அதிகலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த லொறி முன்னால் சென்ற பஸ்சுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொறியில் பயணித்தவர்களே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த இவர்கள் கோப்பாய் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் 32 வயதான தந்தையும், நான்கு வயதான மகளுமே உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை தம்புள்ள கண்டலம பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் லொறி மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு 10.30 அளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும், அதில் பயணித்தவர்களுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளன

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாஸ் குணவர்த்தனவுக்கு பிணை வழங்கப்பட்டது
Next post கூட்டமைப்பு ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற சந்தர்ப்பம் வழங்கியமை தவறு -சம்பிக்க