பெண் ஒருவரைக் கர்ப்பிணியாக்கி ராணுவத்தளபதியைக் கொலைசெய்வதற்கு அனுப்பிய புலிகளின் நடவடிக்கை படுதோல்வி
பிரபாகரன் தலைமையிலான புலிகள் அமைப்பினர் நீண்டகாலமாக திட்டமிட்டு ஒரு தமிழ் பெண்ணைக் கர்ப்பவதியாக்கி புதிய ஜனாதிபதி திரு மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தலைமையிலான அரசாங்கத்தின் ராணுவத்தளபதியான லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களைக் கொலைசெய்யத்திட்டமிட்டிருந்தனர். புலிகள் அமைப்பின் ஆரம்பகால வன்மறைகள் இளைஞர்களையும் யுவதிகளையும் பயன்படுத்தியது தொடர்ந்து பெண்களை தற்கொலைத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தவது இலகுவான நடைமுறை என்பதை அறிந்ததற்கமைய இந்தியப் பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களைக் கொலைசெய்வதற்கு திருமணமாவதற்கு சகல ஒழுங்குகளும் அவரின் பெற்றோரால் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மூளைச்சலவை செய்யப்பட்டு அவர் தற்கொலைக்குண்டினைக் கட்டி அனுப்பப்பட்டு பிரதமரைக்கொலைசெய்தனர் தொடர்ச்சியாக இலங்கை ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரணதுங்கா அவர்களைக் கொலைசெய்வதற்கும் ஒரு பெண் பாவிக்கப்பட்டார் இச்சம்பவங்களின் பரிணாம வழர்ச்சியின் வெளிப்பாடு இன்று ஒரு பெண்ணுடன் ஒலருவரை உடலுறவு வைப்பதற்கான வழிவகைகளையும் புலிகளே தலைமைதாங்கி அப்பெண் கர்ப்பவதியாக்கப்பட்டார். கர்ப்பவதியாக்கப்பட்ட பெண்ணின் துணைகொண்டு ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்களைக் கொல்வதற்கான தாக்குதல் நடாத்தப்பட்டது. புலிகளின் இலக்கு வெற்றியளிக்காதபோதும் அப்பெண் 12 உயிர்களை கொல்வதற்கு புலிகளுக்கு துணைசெய்துள்ளார் சர்வதேசரீதியாக பலதரப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கள் மக்களின் உயிர்களைப் பலியாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளபோதும் அவர்கள் எவரும் பெண்களைக் கர்ப்பவதியாக்கி மனித வெடிகுண்டைக்கட்டி அனுப்பியதாக இன்றுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை
இதுவிடயத்தில் ஒத்தாசை வழங்கியவர்களென்னும் சந்தேகத்தின்பேரில் அப்பெண் தங்கியிருந்த கொழும்பு டாம் வீதி 12 ம் இலக்கத்தில் அமைந்துள்ள விடுதியில் அன்றைய தினம் தங்கியிருந்த 25 வாடிக்கையாளர்கள் தொடர்பான விசாரணைகளை புலனாய்வுத் தறையினர் மேற்கொண்டுள்ளனர். அப்பெண் ஒரு முஸ்லிம் நபரை அழைத்துக்கொண்டு ஹொட்டலுக்குச் சென்றபோது உரிமையாளர் அவருக்கு தங்குவதற்கான அனுமதியை மறுத்திருந்தார். இந்நிலையில் திரும்பிச்சென்ற பெண் பின்னர் ஒரு தமிழருடன் அங்குவருகைதந்தபோது சில நிபந்தனைகளுடன் அவரை அங்கு தங்குவதற்கு உரிமையாளர் அனுமதி வழங்கியுள்ளார்
இக்கொலையாளி முன்னர் சில தடவை ராணுவமுகாமிற்கு ராணுவ சிப்பாய் ஒருவரின் மனைவிபோன்று சென்றுள்ளார். இவ்விடயங்கள் தொடர்பான முழுமையான தகவல்களைப் பெறுவதற்ககான நடவடிக்கைகளில் புலனாய்வுத் துறையினர் செயற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating