மே 1 – மறப்போமா இந்தநாளை!
சபாரட்ணம் சபாலிங்கம் மறப்போமா இவனை!!
பதினொரு வருடங்களுக்கு முன் இதே மேதினத்தில் மக்களின் கருத்துச் சுதந்திரத்தின், ஜனநாயக உரிமையின் குரல்வளையை படுகொலைகளால் நசுக்கிவரும் புலிகளின் பலியெடுப்பு புகலிடத்திலும் அரங்கேற்றப்பட்ட போது புலிகளால் கொடுரூமாக கொலை செய்யப்பட்டு புகலிடத்pல் முதல் விதையாக வீழ்நத சபாலிங்கத்தை நினைவு கொள்வோம்.
மாற்றுக்கருத்து, மாற்றுச் சிந்தனை, ஜனநாயகம் என்பனவற்றை முளைவிடும் முன்பே சுட்டுப் பொசுக்கி வரும் புலிகளின் கொலைப் பாரம்பரியம், சமூகத்திற்கு அறிவைப்பரப்ப வேண்டும் எண்ற தீராத விருப்புடன் பதிப்பாளனாகவும், ஆவணக்காப்பாளனாகவும் இலக்கிய ஆர்வலனகவும் மாற்றுச் சிந்தனையை ஜனநாயகப் போக்கை அணுகிய இவனை அவனது வீட்டிற்கு புலிக் கொலையாளிகளை அனுப்பி வெறியாடிய தினத்தை கோபத்துடன் குறித்துக் கொள்வோம்.இச்சம்பவம் ஒன்றே புலிகளை ஐரோப்பிய ஒன்றியத்தில் தடைசெய்வதற்பகுப் போதுமான சாட்சியமாகும் மனித உரிமைகள் அமைப்பினரூடாக இவ்விடயத்தை சர்வதேச அரங்கிற்குக் கொண்டுசென்று ஆவனசெய்வதற்கு மனிதநேயம் கொண்ட அனைவரும் ஒன்றிணைவீர்!
மாற்றுக்கருத்திற்கும் ஜனநாயக்திற்குமான
சர்வதேசக் குழு
Average Rating