கருணாஅம்மானின் ரி.எம்.வி.பி. – வன்னிபுலிகள் மோதலின் மேலதிக விபரம்
நேற்று அதிகாலை 01:20 மணியளவில் மட்டக்களப்பு கந்தக்காட்டு பகுதியில் அமைந்திருந்த கருணாஅம்மானின் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகளின் இரண்டு முகாம்கள் மீது வன்னிபுலிகள் தாக்குதல் மேற்கொண்டதினையடுத்து அங்கே கடும்மோதல் மூண்டு சுமார் ஒருமணிநேரமாக நீடித்தமோதல் விபரம் குறித்து அதிரடி இணையத்தளத்தின் மட்டக்களப்பு நிருபர் அனுப்பி வைத்துள்ள மேலதிக தகவலில் வன்னிபுலிகள் தரப்பில் 07பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனரெனவும் கருணாஅம்மானின் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தரப்பில் ஈஎன்டிஎல்எப்ஐச் சேர்ந்த நால்வர் உட்பட மொத்தம் எட்டுப்பேர் வன்னிப்புலிகளால் கொல்லப்பட்டதாகவும் வன்னிப்புலிகளால் தாக்க முயற்சித்த இருமுகாம்களிலும் அச்சமயத்தில் மொத்தம் 75பேரே (சின்னத்தம்பி தலைமையிலான முகாமில் 35பேரும் ரீஐசீலன் தலைமையிலான முகாமில் 40பேருமாக மொத்தம் 75பேரே அச்சமயத்தில்) இருந்ததாகவும் இவர்களைத் தாக்கியழிக்க வன்னிப்புலிகளின் nஐயந்தன் படையணி மற்றும் வன்னிபுலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் வன்னிபுலிகளின் திருமலை மாவட்ட இராணுவப்பிரிவின் ஒருபகுதியினர் உட்பட சுமார் முந்நூறுக்கு மேற்பட்ட வன்னிப்புலிகளால் நடாத்தப்பட்ட தாக்குதல் வன்னிப்புலிகளைப் பொறுத்தவரை படுதோல்வியிலேயே முடிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம் தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறித்த கருணாஅம்மான் தரப்பினரே பதில்தாக்குதலை முதலில் ஆரம்பித்ததாகவும் இதனாலேயே வன்னிப்புலிகளுக்கு பாரியஇழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகவலில் நேற்றுக்காலை வன்னிப்புலிகளால் விட்டுச் செல்லப்பட்ட ஆயுதங்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட கருணாஅம்மான் தரப்பினரைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் துப்பாக்கி ஒன்றை மீட்கும் போது அதில் பொருத்தப்பட்டிருந்த நேரக்குண்டு வெடித்ததில் அவ்வுறுப்பினரும் கொல்லப்பட்டதில் மொத்தமாக ஒன்பது உறுப்பினர்களே இதுவரை கொல்லப்பட்டதாகவும் மற்றும் வன்னிப்புலிகள் தப்பியோடும் போது பல கண்ணிவெடிகளையும் நேரக்குண்டுகளையும் விதைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Average Rating