வன்னிப்புலிகளுக்கு எதிராக தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் பதிலடித் தாக்குதல் தீவிரம்
மூதூரில் எட்டு வன்னிப்புலிகள் பலி, இரண்டு காவலரண்கள் தீக்கிரை- இன்று (02.05.2006) காலை 10:50மணியளவில் மூதூரில் வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான கட்டறிச்சான் நாவலடிப் பகுதியில் கருணாஅம்மானின் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் விசேட தாக்குதல் படையணி வன்னிப்புலிகளின் காவலரண்கள் மீது பதிலடித் தாக்குதல் மேற்கொண்டனர். இத்தாக்குதலில் வன்னிப்புலிகள் எட்டுப் பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததுடன் 2பேர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் வன்னிப்புலிகளின்; இரு காவலரண்கள் தீக்கிரையாக்கப்பட்டன. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளினால் வன்னிப்புலிகளுக்கு எதிராக பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தநிறுத்தத்தை மீறும் வகையில் கடந்த 01.05.2006 அன்று தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் காந்தாக்காடு முகாமைத் தாக்கியதைத் தொடர்ந்து வன்னிப்புலிகளுக்கு எதிரான தமது பதிலடித் தாக்குதல்களை தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் விசேட தாக்குதல் படையணியினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தளபதி மங்களன் மாஸ்டர் தலைமையிலான விசேட படையணியினரே பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
(இது தொடர்பாக மேலதிக விபரங்கள் பின்னர் தொடரும்….)
– www.athirady.com
Average Rating