தவறான சிகிச்சைக்கு 33 கோடியே 53 இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்க ஒத்துக்கொண்ட மருத்துவமனை

Read Time:2 Minute, 0 Second

005bலண்டனின் பிரபல குழந்தைகள் மருத்துவமனை ஒன்று தவறுதலாக சிறுமியின் இடது பக்க மூளையில் பசை போன்ற திரவத்தை செலுத்தியதற்கு இழப்பீடாக 33 கோடியே 53 இலட்சம் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு மூளை நரம்புகளில் இரத்தக் கசிவு ஏற்பட்டதாக கண்டறியப்பட்ட மய்ஷா நஜீப் என்ற 10 வயது சிறுமி சிகிச்சைக்காக லண்டன் ஆர்மண்ட் தெரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மூளை நரம்பு இரத்தக் கசிவைச் சரி செய்ய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதில் மூளை நரம்பில் உள்ள இரத்தக்கசிவை நிறுத்துவதற்காக பசை போன்ற மருந்து ஒன்று செலுத்தப்பட்டது.

ஆனால்இ அது தவறுதலாக அவரது இடது பக்க மூளைக்குள் சென்று விட்டது. இதனால் அறுவைச் சிகிச்சை முடிந்த சில தினங்களில் அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கியுள்ளன.

அதனைத் தொடர்ந்து சிறுமி சார்பில் மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வில்லியம் பிர்ட்லெஸ் சிறுமிக்கு 33 கோடியே 53 இலட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

மேலும் சிறுமிக்கு 18 வயது ஆகும் வரை ஆண்டுதோறும் 4 கோடியே 59 இலட்சத்து 45 442 ரூபாய் வழங்கவும்இ 18 வயது முடிவடைந்து 19 வயது தொடங்கும் போது இந்த தொகையை 5 கோடியே 7 இலட்சத்து 64039 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொத்துவிலில் கஞ்சா செய்கையில் ஈடுபட்டவர் கைது
Next post (PHOTOS) பேஸ்புக் காதலால், ஆடம்பரத்திலிருந்து ஏழ்மைக்கு மாறிய பெண்