பிரான்ஸில் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க ஜயந்தன்; இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை

Read Time:2 Minute, 21 Second

ltte.jeyanthanபிரான்ஸில் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜயந்தன் தர்மலிங்கம் என்பரை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவினை அந்நாட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ள நிலையில், குறித்த சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று பிரான்ஸ் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

விடுதலைப் புலிகள் இயத்தின் செயற்பாட்டாளர் என்ற குற்றச்சாட்டின் கீழ் சர்வதேச பொலிஸான இன்டர்போலின் உதவியின் கீழ் பிரான்ஸிலுள்ள ஷெசி நகரில் வைத்து இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய முயற்சித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள அதேவேளை, குண்டுத் தாக்குதல்களை நடத்தும் குழுவொன்றையும் இவர் செயற்படுத்தி வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இவரைக் கைது செய்வதற்காக இன்டர்போல் பொலிஸாரின் உதவி நாடப்பட்ட நிலையில், அண்மையில் இவர் கைதானார். இதனையடுத்து இவரை அந்நாட்டிலிருந்து நாடு கடத்துவதற்கான அனுமதி கடந்த 17ஆம் திகதி பிரான்ஸ் நீதிமன்றத்தில் அந்நாட்டு பொலிஸாரால் கோரப்பட்டது.

இந்த அனுமதி கிடைக்கும் வரையில், அவர் பிரான்ஸ் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற அனுமதி கிடைத்தவுடன் அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “பூலோகம்” – அதிகாரபூர்வ ட்ரெய்லர் (VIDEO)
Next post ஆக்ஷன் நாயகியாக நயன்தாரா