ஆக்ஷன் நாயகியாக நயன்தாரா

Read Time:1 Minute, 36 Second

004சினிமாவில் விஜயசாந்தி ஆக்ஷன் நடிகையாக கருதப்பட்டார். இவர் நடித்த ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்.’ படத்தில் அதிரடி சண்டை போட்டார்.

இதே படத்தை ‘பவானி’ என்ற பெயரில் ரீமேக் செய்து சினேகா நடித்தார். இவரும் தாவி குதித்து சண்டைபோட்டு ஆக்ஷன் நடிகை என்ற அடையாளத்தை பெற்றார்.

இவர்களுக்கு பிறகு அனுஷ்கா ஆக்ஷன் வேடங்களில் நடித்து வருகிறார். ‘இரண்டாம் உலகம்’, ‘ருத்ரமாதேவி’ படத்திலும் மகாராணி வேடத்தில் சண்டை காட்சிகளில் நடித்து வருகிறார். வாள் சண்டை, குதிரையேற்றம் போன்றவற்றில் பயிற்சிகள் எடுத்து இதில் நடிக்கிறார்.

அனுஷ்காவை தொடர்ந்து நயன்தாராவும் ஆக்ஷன் நடிகை அவதாரம் எடுக்கிறார். கோபிசந்த் ஜோடியாக நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் வில்லன்களுடன் அதிரடியாக சண்டை போட்டு நடிக்கிறாராம்.

ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவில் காட்சியை படமாக்குகின்றனர். ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் இந்த சண்டை காட்சியை படமாக்கி வருகிறார். இப்படத்துக்கு பிறகு நிறைய ஆக்ஷன் படங்கள் நயன்தாராவுக்கு குவியும் என்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரான்ஸில் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க ஜயந்தன்; இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை
Next post வீதிக் குழியில் மரம் நாட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..