வீதிக் குழியில் மரம் நாட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..

Read Time:2 Minute, 0 Second

4014hatton1அட்டன் – வெலிஓயா, ஆக்ரோயா வீதியின் சுமார் 10 கிலோமீற்றர் வரையான பகுதி 25 வருட காலமாக புனரமைக்கப்படாததன் காரணமாக இந்த வீதி பெரும் குண்டும் குழியுமாக இருப்பதனால் கண்டித்து நேற்று இந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் செனன் சந்தியில் வெலிஒயா பிரதான வீதியை மறைத்து கறுப்பு கொடி மற்றும் பதாதைகளை ஏந்தி இந்த வீதியில் இருக்கும் பெரும் குழியில் வாழைமரத்தை நாட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

கடந்த தேர்தல் காலத்தில் இந்த பாதையை புனரமைப்பதாக கூறி மலையக அரசியல்வாதிகள் தங்களது வாக்குகளை மட்டும் பெற்றுச் சென்று இப்போது இந்த விடயத்தில் அசிரத்தையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னரேனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் சுமார் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட தோட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பாதை வீதி மோசமாக இருப்பதன் காரணமாக இ.போ.ச பஸ்கள், தனியார் பஸ்கள், முச்சக்கரவண்டிகள் போன்ற வாகனங்கள் இந்த வீதியில் செல்வதற்கு பெரும் சிரமப்படுகிறது என வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆக்ஷன் நாயகியாக நயன்தாரா
Next post 13 வயது சிறுமியை வல்லுறவு செய்ததாகக் கூறப்படும் 72 வயது முதியவர் கைது