இறந்த வாலிபரை உயிரோடு எழுப்புவதாக கூறிய போலி பெண் மந்திரவாதிக்கு தர்ம அடி!!

Read Time:2 Minute, 43 Second

6009ce7f-2879-4af3-8431-6e551ace7fc7_S_secvpfஒரிசா மாநிலம் மயூர் பிகாஞ் மாவட்டம் ஜோதா பொக்கா கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் சூசன்ட் ஹன்சா (18).

இவருக்கு, உடல்நிலை சரியில்லாததால் கடந்த 23–ந்தேதி அருகில் உள்ள ரைராங்பூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வாலிபர் சூசன்ட்ஹன்சா இறந்து விட்டதாக கூறினார்கள்.

இதையடுத்து, அவரது உடலை மீண்டும் கிராமத்துக்கு கொண்டு சென்றனர். இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்தன. அப்போது அந்த வாலிபரின் கை அசைந்ததாக சிலர் கூறினார்கள். எனவே அவர் மீண்டும் உயிருடன் எழுவார் என்று குடும்பத்தினர் நம்பினார்கள். மீண்டும் பரிசோதித்த போது உயிர் இல்லை.

இந்த நிலையில் அங்கு வந்த 3 பெண்கள் இறந்த வாலிபரை உயிருடன் எழுப்புவதாக கூறினார்கள். நாங்கள் மந்திரம் சொன்னால் உயிர் வரும் என்று கிராம மக்களை நம்ப வைத்தனர்.

நீண்ட நேரம் மந்திரம் சொன்னார்கள். அதற்கு எந்த பலனும் இருப்பதாக தெரியவில்லை. நிலைமை மோசமாகவே 3 பெண்களில் ஒருவர் நைசாக எழுந்து தப்பி ஓட முயன்றார். அவரது பெயர் பனாஹஸ்தா (60).

அந்த பெண்ணை கிராம மக்கள் மடக்கிப் பிடித்துக் கொண்டனர். தப்பி ஓட முயன்றதால் அந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே கம்பத்தில் கட்டி வைத்து சிலர் அடித்து உதைத்தனர். விசாரணையில் அந்த பெண் போலி மந்திரவாதி என்று தெரிய வந்தது.

வாலிபருக்கு மத்திரத்தால் உயிர் கொடுப்பதாக கூறிய செய்தி பக்கத்து கிராமங்களுக்கும் பரவியது. இதனால் கூட்டம் அதிகமானது. ஆனால் வாலிபரின் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் நழுவி தப்ப முயன்ற பெண் சிக்கிக் கொண்டார் என்ற தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டனர். மற்ற மோசடி பெண்களையும் கைது செய்தனர்.

இறந்த வாலிபரின் உடலுக்கு போலீஸ் அறிவுரைப்படி இறுதி சடங்கு நடந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெங்களூரில் சிறுமி கற்பழிப்பு விவகாரம்: 2 உடற்பயிற்சி ஆசிரியர்கள் கைது!!
Next post ஆபாச படம் எடுத்து மிரட்டல்: கைதான 2 பெண்கள் மீது மேலும் ஒரு வழக்கு!!