குடிபோதையில் கடலுக்குள் காரை ஓட்டிய வாலிபர்கள்

Read Time:3 Minute, 16 Second

India.map.011.jpgதிருவனந்தபுரத்தில் உள்ள கோவளம் கடற்கரையில் குடிபோதையில் காரில் உலா வந்த நாகர்கோவில் வாலிபர்கள் 5 பேர் கடற்கரையில் காரை ஓட்டுவதாக கருதிக்கொண்டு, கடலுக்குள் காரை செலுத்தினார்கள். கடலுக்குள் பாய்ந்த கார் மூழ்க தொடங்கியதும், போதை சற்று தெளிந்து, உயிருக்கு போராடினார்கள். கடலில் தத்தளித்த அவர்களை மீனவர்களும், தீயணைப்பு படையினரும் சேர்ந்து ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். இந்த விபரீத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- நாகர்கோவிலை சேர்ந்தவர்கள் அஜீம்சன் (வயது31), சுந்தர் (35), பிஜின்ரேஷ் (33), சாம்பென்சிலி (28), பிரவீண் (31) இவர்கள் 5 பேரும் கேரளாவுக்கு ஒரு காரில் சுற்றுலா சென்றனர். அங்கு பல்வேறு இடங்களை பார்த்து விட்டு நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் அவர்கள் கோவளம் ஹவ்வா கடற்கரைக்கு வந்தனர். அங்கு அவர்கள்அளவுக்கு அதிகமாக மது குடித்தனர். இதனால் போதை ஏறியதும் அவர்கள் மனம்போன போக்கில் கடற்கரையில் காரை ஓட்டிச்சென்றனர். காரை அஜீம்சன் ஓட்டிச் சென்றார்.

ஒரு கட்டத்தில் அவர்கள் காரை வேகமாக செலுத்திய போது கார் திடீரென்று கடலை நோக்கி பாய்ந்தது. கடற்கரையில் தான் செல்வதாக கருதிக்கொண்டு காரை, அவர்கள் மேலும் வேகமாக செலுத்தினர். இதனால் கார் ஆழ கடலுக்குள் பாய்ந்தது.

கடலில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்றதும், கார் மூழ்க தொடங்கியது. அப்போது தான் போதை மயக்கத்தில் இருந்தவர்கள் சற்று தெளிவு பெற்றனர். ஆனால் அதற்குள்ளாக அவர்களும் கடலில் மூழ்க தொடங்கினர். இதனால் உயிருக்கு போராடிய அவர்கள் அபய குரல் எழுப்பினார்கள். கடற்கரையில் இருந்து அதை பார்த்தவர்கள் கூச்சல் போட்டனர். உடனே அங்கிருந்த போலீசார்தீயணைப்பு வீரர்களுக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.

மீனவர்களும், தீயணைப்பு வீரர்களும் மற்றும் ஆட்டோ டிரைவர்களும் கடலுக்குள் பாய்ந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி 5 பேரையும் காருடன் மீட்டனர்.சினிமாவைப்போல் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குடிபோதையில் காரை ஓட்டியதற்காக அவர்கள் 5 பேரையும் கோவளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பினுஜோஸ் சாக்கோ கைது செய்தார். காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ரஷியாவில் 11 பேர் உடல் கருகிச்சாவு
Next post கொழும்பில் புலிகள் தற்கொலை தாக்குதல்: இலங்கை ராணுவ துணைத் தளபதி பலி