சார்லி சாப்ளின் தொப்பி, கைத்தடி ரூ. 63 லட்சத்துக்கு ஏலம்

Read Time:1 Minute, 9 Second

Charly.Chaplin.jpg சர்வதேச அளவில் நகைச்சுவைக்குப் பெயர்போன சார்லி சாப்ளின் பயன்படுத்திய தொப்பியும் கைத்தடியும் ரூ. 63 லட்சத்துக்கு ஏலம் போனது. இத்தகவலை பொனாம்ஸ் அண்ட் பட்டர்ஃபீல்ஸ் ஏல நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஜேனேல் கிரிக்ஸ்பி தெரிவித்தார். இரு பொருள்களையும் வாங்கியது யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. தொப்பியின் உட்புறத்தில் அதன் தயாரிப்பாளரின் பெயர், முகவரி முத்திரையிடப்பட்டுள்ளது. சார்லி சாப்ளினின் கைத்தடி மூங்கிலால் செய்யப்பட்டிருந்தது. அதன் உயரம் 32 அங்குலங்கள். இந்த ஏலத்தில் அமெரிக்க முன்னாள் பிரதமர் பில் கிளிண்டன் பயன்படுத்திய சாக்ஸôபோன் மற்றும் பல பிரபலங்களின் பொருள்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வேலூர் ஜெயிலில் ராஜீவ் கொலையாளி முருகன் மீண்டும் உண்ணாவிரதம்
Next post ஈரானில் சாலை விபத்தில் 22 பேர் பலி