ஈரானில் சாலை விபத்தில் 22 பேர் பலி
Read Time:43 Second
ஈரான் நாட்டின் கிழக்குப்பகுதியில் நாக்பந்தன் நகர் அருகே பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 22 பேர் பலியானார்கள். ஈரானில் சாலை விபத்துக்களில் உயிர்ப்பலி அதிக அளவில் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று. மோசமான சாலைகள், பொறுப்பற்ற டிரைவிங், போலீஸ் மேற்பார்வை இல்லாமை ஆகியவற்றால் விபத்துக்கள் அதிக அளவில் ஏற்படுவது வழக்கமானது தான், நேற்று நடந்த விபத்தில் 22 பேர் பலியானதோடு பலர் காயம் அடைந்தனர்.