கால் இறுதிக்கு தகுதி பெற்றது: பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது

Read Time:4 Minute, 37 Second

W.Football1.jpgஉலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நள்ளிரவு நடந்த கடைசி 2-வது சுற்று ஆட்டத்தில் `எச்’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த ஸ்பெயின்-`ஜி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த பிரான்ஸ் அணிகள் மோதின. ஸ்பெயின் லீக் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது கிடையாது. மூன்றிலும் வென்று 1998-ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் 2 டிரா, ஒரு வெற்றி பெற்று இருந்தது. இரு அணிகளுமே பலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டத்தில் மிகுந்த தெள்ளர்ப்பு இருந்தது. அதற்கு ஏற்றவாறு இரு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். 24-வது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு `பெனால்டிக்’ கிடைத்தது. அந்த அணி வீரர் பேப்லோ கோல் அடிக்க முயற்சித்த வேளையில் பிரான்ஸ் பின்கள வீரர் துராம் அவரை பிடித்து கீழே தள்ளினார். இதனால் நடுவர் ஸ்பெயினுக்கு சாதகமாக பெனால்டி கொடுத்தார். இதை பயன்படுத்தி டேவிட் வில்லா கோல் அடித்தார். இதன் மூலம் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. கோல் வாங்கி அதிர்ச்சியில் பிரான்ஸ் வீரர்கள் தொடர்ந்து முன்னேறி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல் பாதி ஆட்டம் முடிய 4 நிமிடம் எஞ்சி இருந்தபோது பிரான்ஸ் பதில் கோல் அடித்து சமன் செய்தது. 41-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் பிராங்ரிபெரி மிகவும் அருமையாக கோல் அடித்தார். முதல் பாதி ஆட்டம் முடிவில் 1-1 என்ற சமநிலை இருந்தது.

2-வது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்கள் மேலும் கோல் அடிக்க போராடி னார்கள். ஆனால் ஆட்டம் முடியும் நேரத்தை நெருங்கி கொண்டிருந்தது. இதனால் கூடுதல் நேரத்திற்கு போட்டி சென்று விடுமோ என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால் 83-வது நிமிடத்தில் பிரான்ஸ் 2-வது கோலை அடித்து முன்னணி பெற்று `கார்னர்” வாயிலை பயன் படுத்தி ஹீடேன் அடித்த பந்தை பேட்ரிக் வியரா தலையால் முட்டி கோல் போட்டார்.

1-0 என்ற கணக்கில் பின் தங்கி இருந்ததால் ஸ்பெயின் வீரர்கள் ஆக்ரோஷ ஆட்டத்தில் ஈடுபட்டனர். பதில் கோல் அடித்து சமன் செய்ய போராடினார்கள். பிரான்ஸ் அணியின் பின் களம் அவர்களுக்கு முட்டுக் கட்டையாக இருந்தது.

92-வது நிமிடத்தில் பிரான்ஸ் 3-வது கோலை அடித்தது. நட்சத்திர வீரர் ஹீடேன் தனி ஆளாக பந்தை கடத்தி சென்று கோல் கீப்பரை ஏமாற்றி அருமையாக கோல் அடித்தார். ஸ்பெயின் வீரர் களால் கடைசி வரை மேலும் கோல் அடிக்க இயலவில்லை. இறுதியில் பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது. முன்னாள் சாம்பியனான பிரான்ஸ் கடந்த உலக கோப்பையில் 2-வது சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. தற்போது கால் இறுதிக்கு முன்னேறி இருக்கிறது.

முன்னதாக நடந்த ஆட் டத்தில் பிரேசில் 3-0 என்ற கணக்கில் கானாவை வென்றது. தோற்றாலும் கானாவின் ஆட்டம் மெய் சிலிக்க வைத்தது. பிரேசிலை விட அந்த அணி வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். பிரேசில் அடித்த 2-வது கோல் ஆப்சைடு ஆகும். இதை லைன்ஸ் மேன் கவனிக்கவில்லை. இதே போல மேலும் சில முடிவுகள் கானாவுக்கு பாதகமாக இருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஈராக்கில் குண்டு வெடித்து 40பேர் பலி
Next post உலக கோப்பை கால்பந்து: கானாவை தோற்கடித்து பிரேசில் கால் இறுதிக்கு தகுதி