டோக்கியோவை முந்தியது மாஸ்கோ

Read Time:1 Minute, 44 Second

Mosko.jpgஉலகிலேயே செலவு அதிகம் பிடிக்கக்கூடிய நகரமாக இதுவரை ஜப்பானின் தலைநகரான டோக்கியோ இருந்தது. இப்போது அந்த இடத்துக்கு மாஸ்கோ முன்னேறி உள்ளது. மெர்சர் எனப்படும் மனிதவள நிறுவனம் நடத்திய ஆய்வில் ரஷியத்தலைநகரான மாஸ்கோ, ஒரே ஆண்டில் 3 நகரங்களை பின்னுக்கு தள்ளி விட்டு முதல் இடத்தை பிடித்தது. விலைவாசி அதிகம் உள்ள, செலவு அதிகம் பிடிக்கக்கூடிய நகரமாக மாஸ்கோ முன்னணியில் உள்ளது. 2005-ம் ஆண்டில் டோக்கியோ அந்த இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு அது 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. தென்கொரியாவின் சியோல் 2-வது இடத்தைப்பிடித்து உள்ளது. இதுவும் 3 நகரங்களை பின்னுக்கு தள்ளி விட்டு முன்னேறி உள்ளது. ஆங்காங் 5 நகரங்களை பின்னுக்குத் தள்ளி விட்டு 4-வது இடத்துக்கு வந்து உள்ளது. லண்டன் 5-வது இடத்தையும் ஜப்பானின் ஒசாகா நகரம், 6-வது இடத்தையும், சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரம் 7-வது இடத்தையும், கோபன்ஹெகன் 8-வது இடத்தையும் நார்வேநாட்டின் ஆஸ்லோ 10-வது இடத்தையும் பிடித்து உள்ளன. நிïயார்க் நகரமும் 10-வது இடத்தில் உள்ளது. மொத்தம் உள்ள 144 நகரங்களில் பராகுவே நாட்டின் தலைநகரான அசன்சியான் கடைசி இடத்தில் உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிரான்ஸ் போட்டி இறுதியைப் போன்றது – ரொனால்டோ!
Next post தனது சகோதரரை கத்தியால்குத்தி கொலைசெய்த இலங்கைத் தமிழருக்கு எட்டுவருட சிறைத்தண்டனை –சுவிஸில் சம்பவம்