மரண தண்டனை பெற்ற இந்திய மீனவர்களை விடுவிக்க முடிவு?

Read Time:1 Minute, 45 Second

2016479832053937843MahindaPhoneTalk2இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஐவரையும் இந்தியாவுக்கு அனுப்பிவைக்க இலங்கை அரசு இணங்கியுள்ளதாக பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதியும் பேசிக்கொண்டதற்கிணங்க இவர்களை இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர் விவகாரம் குறித்து இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார் என்றும் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கை நீதிமன்றில் மரண தண்டனை பெற்றுள்ள இந்திய மீனவர்கள் ஐவரையும் இந்தியச் சிறைக்கு மாற்றுவதற்கு மஹிந்த இணங்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஐவரும், போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 30ஆம் திகதி, ஐவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருச்சியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் முகத்தில் மிளகாய் பொடி தூவி 15 பவுன் நகை கொள்ளை!!
Next post மஹிந்தவுக்கு முடியுமா? முடியாதா? என்று இன்று உயர் நீதிமன்றம் சொல்லும்!!