அநுராதபுரத்தில் இன்று மஹிந்தவின் முதலாவது பிரச்சார கூட்டம்!!
Read Time:1 Minute, 21 Second
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (11) அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.
இன்று காலை அநுராதபுரத்தில் ஸ்ரீ மா போதியைத் தரிசித்து மகாநாயக்க தேரர்களின் ஆசிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ள ஜனாதிபதி, அதனையடுத்து அநுராதபுர நகரில் நடைபெறும் முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டத்திற்குத் தலைமை வகிப்பார்.
இந்நியாவுக்கான தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி நேற்று நாடு திரும்பினார்.
இந்திய விஜயத்தின் போது அவர் திருப்பதி ஸ்ரீ வெங்கடேசபதி திருத்தலத்தைத் தரிசித்தார்.
அநுராதபுரத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்களுடன் பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
Average Rating