முன்னாள் புலிகளால், சுட்டுக் கொலை செய்யப்பட்ட; நகுலேஸ்வரனின் கொலையும், அதிர்ச்சியூட்டும் பின்னணியும்!! (கட்டுரை)!!

Read Time:25 Minute, 17 Second

timthumbஅது கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதி புதன்­கி­ழமை. சூரியன் ஓய்­வெ­டுத்து சில மணி நேரங்கள் கடந்­தி­ருந்த நிலையில் மக்களும் ஓய்­வெ­டுக்கச் சென்று கொண்­டி­ருந்த நேரம் அது.

நேரமோ எப்­ப­டியும் இரவு 8.30 இருக்கும். மன்னார், இலுப்­பங்­க­டவை பொலிஸ் பிரிவின் கணே­ச­புரம் பகு­தியின் வெள்ளாங்­குளம் பிர­தே­சத்தை சேர்ந்த நகு­லேஸ்­வரன் தனது வீட்­டுடன் சேர்ந்­துள்ள பகு­தியில் கொங்­கிரீட் கற்­களை அரிந்து கொண்டிருந்தார்.

மின்விளக்­குகள் சூழ தனது மைத்­து­ன­ருடன் (மனை­வியின் சகோ­தரர்) இந்­திய வீட்­டுத்­திட்டம் ஊடாக தமக்குக் கிடைத்த வீட்டை மேலும் மெரு­கூட்டும் வித­மா­கவே நகு­லேஸ்­வரன் அந்த வேலை­களை செய்து கொண்­டி­ருக்க வேண்டும்.

Nakules_CIசுமார் 40 வய­து­டைய நகு­லேஸ்­வ­ர­னுக்கு இரண்டு பிள்­ளைகள். மனைவி கவிதா பிர­தே­சத்தின் பாட­சா­லை­யொன்றில் ஆசிரியை. மக­ளுக்கு 12 வயதாகும் நிலையில் மக­னுக்கு 9 வய­தாகும். நிம்­ம­தி­யாக வாழ்ந்த இந்த குடும்­பத்தின் ஓட்டத்துக்காக நகு­லேஸ்­வரன் விவ­சாயம் செய்து வந்தார்.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் வீட்­டுடன் சேர்ந்­துள்ள பகு­தியில் கொங்­கிரீட் கற்­களை அரிந்து ­கொண்­டி­ருந்த நகு­லேஸ்­வரன் மீது அடை­யாளம் தெரி­யாத ஆயு­த­தா­ரிகள் குறி தவ­றாது துப்­பாக்­கிச்­சூட்டை நடத்தியுள்­ளனர்.

துப்­பாக்கிச் சத்­தத்­துடன் மைத்­துனர், மனை­வியின் அல­ற­லுடன் நகு­லேஸ்­வ­ரனின் வீட்டை பிரதேசவாசிகள் சூழ்ந்து கொள்ள தலையில் குறி தவ­றாது பாய்ந்த துப்­பாக்கி சன்­னத்­துக்கு ஸ்தலத்திலேயே நகுலேஸ்­வரன் பலி­யானார்.

விடயம் இலுப்­பக்­க­டவை பொலிஸ் நிலை­யத்­துக்கு அறி­விக்­கப்­ப­டவே அவர்­களும் ஸ்தலத்­துக்கு விரைந்­த­துடன் பிரதேசத்தின் பாது­காப்பும் பலப்­ப­டுத்­தப்­பட்டு தேடு­தல்கள் ஆரம்­ப­மா­கின.

துப்­பாக்­கிச்­சூடு இடம்­பெற்று சில மணி நேரங்­க­ளுக்குள் அது தொடர்­பான சந்­தேகம் இரா­ணு­வத்­தினர் மீது திரும்­பி­யது.

ஏனெனில் மன்னார் மாவட்­டத்தின் இலுப்­பக்­க­டவை பொலிஸ் பிரிவின் வெள்ளா­ங்­குளம் உள்­ளிட்ட பகு­திகள் இரா­ணுவ கட்டுப்­பாட்டு பிர­தே­சங்­க­ளாகும்.

அத்­துடன் தொடர்ச்­சி­யாக இரா­ணுவ ரோந்து நட­வ­டிக்­கை­களும் இந்த பிர­தே­சங்­களில் இடம்­பெற்று வந்த நிலையில் ஆயுததா­ரி­களின் சஞ்­ச­ரிப்­புக்­கான சாத்­தி­யப்­பா­டுகள் மிகக் குறை­வா­ன­தாகும்.

அத்­துடன் நகு­லேஸ்­வரன் முன்னாள் தமி­ழீழ விடு­தலைப் புலிகளின் காவல்­துறை உறுப்­பினர், 2004ஆம் ஆண்டு விடு­தலை புலி உறுப்­பி­ன­ராக சேர்ந்து கொண்ட நகு­லேஸ்­வரன் 2009ஆம் ஆண்டு இறு­திக்­கட்ட யுத்­தத்தின் போது இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்து முகாம் ஒன்­றுக்கு அனுப்­பப்­பட்­டவர்.

குறித்த முகாமில் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் புலி­களின் உறுப்­பினர் என்­பது அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­துடன் விசா­ர­ணைக்கும் உட்­ப­டுத்­தப்­பட்­டவர்.

எனினும் புலிகள் இயக்­கத்தில் சேர்ந்­தது முதல் நகு­லேஸ்­வரன் ‘ஈழம் பொலிஸ் பிரிவின்’ கான்ஸ்­ட­பி­ளாக புலி­களின் கட்டுப்பாட்டு பிர­தே­சங்­க­ளி­லேயே கட­மை­யாற்­றி­யுள்­ள­மையும் குண்­டு­வெ­டிப்­புக்கள், தாக்குதல்கள், படு­கொ­லை­க­ளுடன் அவ­ருக்கு எவ்­வித தொடர்பும் இல்லை என்­பதை விசா­ர­ணை­யூ­டாக உறுதி செய்த பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் அவருக்கு புனர்­வாழ்­வ­ளித்து சமூ­க­ம­யப்­ப­டுத்­தினர்.

2012ஆம் ஆண்டு சமூக மயப்­ப­டுத்­தப்­பட்ட நகு­லேஸ்­வரன் தனது மனைவி பிள்­ளை­க­ளுடன் வாழ்ந்து வந்­த­போதே இந்த துப்பாக்கிச் சூட்­டுக்கு இலக்­கா­கி­யி­ருந்தார்.

இவ்­விரு கார­ணங்­க­ளையும் அடிப்­ப­டை­யாக கொண்டே இரா­ணு­வத்­தினர் மீது சந்­தே­கங்கள் வலுத்­த­துடன் மஜிஸ்திரேட் நீதிவானின் ஸ்தல பரி­சோ­த­னை­களில் T-56ரக துப்­பாக்­கியே கொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்­ளது என்­பதை வெளிப்­ப­டுத்­தும்­போது அந்த சந்­தேகம் மேலும் அதி­க­ரித்தது.

விடயம் சர்­வ­தே­சத்தின் கவ­னத்­தையும் ஈர்த்­தது. புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்­டோ­ருக்கு பாது­காப்­பில்லை என்றும் இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்­தியும் பாரா­ளு­மன்­றிலும் வாதங்கள் முன்­வைக்­கப்­பட சர்வதேசத்­திலும் அந்த கோணத்திலேயே இக்­கொலை நோக்­கப்­பட்­டது.

இரா­ணுவ கட்­டுப்­பாட்டு பிர­தேசம் என்­ப­தாலோ என்­னவோ, சம்­பவம் இடம்­பெற்­றது முதல் இரா­ணுவம் குவிக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் இலுப்­பக்­க­டவை பொலி­ஸா­ருடன் சேர்ந்­து இரா­ணுவம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தது.

வட மாகா­ணத்­துக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜய­சுந்­தர, வன்னி மாவட்டத்­துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் யூ.கே.திஸா­நா­யக்க ஆகி­யோரின் விசேட ஆலோசனைக்கு அமைய மன்­னா­ருக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சந்­தன அழகக்கோனின் மேற்­பார்­வையில் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன.

இரா­ணு­வத்­தினர் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் அல்­லது சந்­தே­கங்கள் மேலெ­ழுந்­த­தாலோ என்­னவோ கொலை­யா­ளி­களை தேடி இரா­ணு­வமும் முழு மூச்­சுடன் செயற்­பட்­டது.

நகு­லேஸ்­வ­ரனின் வீட்­டுக்கு அரு­கே­யுள்ள காட்டுப் பகு­தியில் இரா­ணு­வத்­தினர் சல்­லடை போட்டு தேடு­தலை ஆரம்­பித்­தனர். அதன்­போது நகு­லேஸ்­வ­ரனின் வீட்­டி­லி­ருந்து சுமார் 800 மீற்­றர் தொலைவில் காட்டுக்குள் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த T56ரக துப்­பாக்­கி­யொன்று மீட்­கப்­பட்­டது.

அது பழைய துப்­பாக்­கி­யொன்று என்­பதும் துப்­பு­ரவு செய்­யப்­பட்­டுள்­ள­மை­யையும் அதனை பார்க்கும் எவரும் அறிந்து கொள்ளக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

இதனை தொடர்ந்து விடயம் பொலி­ஸாரின் கவ­னத்­துக்கு கொண்டு வரப்­ப­டவே துப்­பாக்கி இருந்த இடத்­துக்கு சென்ற பொலிஸார், கைவிரல் ரேகை பதிவுப் பிரிவு, மோப்ப நாய் என்­ப­ன­வற்றை வர­வ­ழைத்து விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­தினர்.

குறித்த T- 56 ரக துப்­பாக்கி நகு­லேஸ்­வ­ரனின் கொலைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும் என சந்­தே­கித்த பொலிஸார் வவு­னியா, இரட்டை பெரிய குளம் பொலிஸ் காவ­ல­ரணில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ‘செல்ஸா’ என்ற மோப்ப நாயை ஸ்தலத்­துக்கு வர­வ­ழைத்து அந்த துப்­பாக்­கியை மோப்பம் பிடிக்கச் செய்­தனர்.

குறித்த ‘செல்ஸா’ மோப்ப நாய்க்கு பொறுப்­பான பொலிஸ் கான்ஸ்­டபிள் பிரி­யன்த (73477) துப்­பாக்­கியை செல்­ஸா­வுக்கு முகரச் செய்த மறு­க­ணமே, செல்ஸா கான்ஸ்­டபிள் பிரி­யன்­த­வையும் இழுத்­துக்­கொண்டு தனது வேலையை ஆரம்­பித்­தது.

நகு­லேஸ்­வ­ரனின் வீட்­டி­லி­ருந்து சுமார் 150 மீற்­றர்கள் தூரத்­தி­லுள்ள வீடொன்­றுக்கு சென்ற செல்ஸா அந்த வீட்டின் முன்னால் வித்­தி­யா­ச­மான முறையில் நடந்து கொண்­ட­துடன் பின்னர் கான்ஸ்­டபிள் பிரியந்தவின் கால­டியில் படுத்து தனது வேலை முடிந்­ததை வெளிப்­ப­டுத்­தி­யது.

அந்த வீட்டில் வாழ்ந்­தவர் ரமேஷ் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) மிரு­க­வேட்டை, காடு­களில் மரங்­களை வெட்டி விற்­பனை செய்து வாழ்ந்து வரும் ஒருவர். T – 56 ரக துப்­பாக்­கியை பயன்­ப­டுத்தும் அள­வுக்கு பரீட்­ச­ய­மற்­றவர் அல்ல.

அத்­துடன் மேலோட்­ட­மாக பார்க்­கும்­போது ரமே­ஷூக்கு நகு­லேஸ்­வ­ரனை கொலை செய்ய வேண்­டிய எந்த தேவையும், கார­ணமும் பொலி­ஸா­ருக்கு புலப்­ப­ட­வில்லை. அதனால் ரமேஷை உட­ன­டி­யா­கவே கைது செய்­யாது பொலிஸார் விசா­ர­ணை­களை தொடர்ந்­தனர்.

நகு­லேஸ்­வரன் கொலை செய்­யப்­பட்டு 24 மணி நேரங்­க­ளுக்கும் அதி­க­மாக நேரம் கடந்த நிலையில் சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­ப­டா­ததால் விசா­ர­ணை­களை புலன் விசா­ரணை பிரி­வி­ன­ருக்கு கைய­ளிக்க பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் தீர்­மா­னித்தார்.

இது தொடர்பில் அரச புலன்விசா­ரணைப் பிரி­வுக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல்­சந்­திர வாகிஸ்­டவை அழைத்து விசா­ரணை நடத்தும் பொறுப்பை கைய­ளித்தார்.

இந்­நி­லையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாகிஸ்ட தனது பொறுப்பின் கீழ் உள்ள பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஸங்க கர­விட்­டவின் மேற்­பார்­வையில் நகு­லேஸ்­வ­ரனின் கொலை சந்­தேக நபர்­களை கைது செய்யும் பொறுப்பை பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஜகத் பொன்­சேகா தலை­மை­யி­லான குழு­வி­ன­ரிடம் ஒப்­ப­டைத்தார்.

இந்­நி­லையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஜகத் பொன்­சேகா தலை­மை­யி­லான குழு­வினர், நவம்பர் மாதம் 14ஆம் திகதி பிற்­பகல் வேளையில் வெள்ளா­ங்­குளம் கிரா­மத்தை அடைந்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்த­னர்.

இலுப்­பக்­க­டவை பொலிஸ் நிலை­யத்தின் விசேட பொலிஸ் குழு­வொன்று ஏற்­க­னவே முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களின் அறிக்­கையை படித்த பின்னர் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு இந்த விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது.

இதன்­போது பிர­தே­ச­மெங்கும் இரா­ணுவ புல­னாய்வுப் பிரி­வி­னரும் அரச புல­னாய்வுப் பிரி­வி­னரும் பரந்து தகவல் சேகரிப்பில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

இந்­நி­லை­யில்தான் நகு­லேஸ்­வ­ரனின் கொலை இடம்­பெற்ற நவம்பர் 12 ஆம் திகதி ரமேஷ் மேலும் சில­ருடன் பல இடங்களில் ஒன்று கூடி பேசி­யுள்­ளமை தொடர்­பான தகவல் இரா­ணுவ புல­னாய்­வா­ளர்­க­ளுக்கு கிடைத்­துள்­ளது.

இது தொடர்பில் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு இரா­ணுவ புல­னாய்­வா­ளர்கள் குறிப்­பி­டவே அந்த இர­க­சிய சந்திப்புக்கள் குறித்து மேலும் தக­வல்­களை சேக­ரிக்­க­லா­யினர்.

இறு­தியில் ரமேஷை கைது செய்­வது என தீர்­மா­னித்த உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஜகத் பொன்­சேகா தலை­மை­யி­லான பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் நகு­லேஸ்­வரன் கொலை­யுடன் தொடர்­பு­டைய சந்­தே­கத்தில் முதல் சந்­தேக நப­ராக அவரை கைது செய்­தனர்.

இந்த கைதைத் தொடர்ந்து நகு­லேஸ்­வ­ரனின் கொலை தொடர்­பான அனைத்து தக­வல்­க­ளையும் வெளிப்­ப­டுத்திக் கொள்ள பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் முடிந்­தது.

ஈழம் பொலிஸ் கான்ஸ்­ட­பி­ளாக இருந்த நகு­லேஸ்­வரன் புனர்­வாழ்வின் பின்னர் விவ­சாயம் செய்து தனது வாழ் நாளை ஓட்டி வந்தார்.

ஈழம் பொலிஸ் பிரிவில் இருந்த போதும் சட்­டப்­படி கட­மையை செய்­வதில் கைதேர்ந்­த­வ­ராக நகு­லேஸ்­வரன் இருந்துள்ளதுடன் அந்த நேர்­மை­யா­னது விவ­சாய சங்கம் ஒன்றின் தலைமை பொறுப்­பையும் நகு­லேஸ்­வ­ர­னுக்கு பெற்றுக்கொ­டுத்­தது.

அந்­துடன் பிர­தே­சத்தின் பொலிஸ் இரா­ணு­வத்­தி­ன­ரு­டனும் நகு­லேஸ்­வரன் சிறந்த உற­வினை பேணி வந்­தவர்.

நகு­லேஸ்­வ­ரனைப் போன்றே புனர்வாழ்­வ­ளிக்­கப்­பட்ட மற்­றொரு புலி உறுப்­பி­னரும் வெள்ளாங்குளம் பகு­தியில் இருந்தார். அவரின் பெயர் விநோத். (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) புலி­களின் புல­னாய்வுப் பிரிவில் கட­மை­யாற்­றி­யி­ருந்த வினோத் 2009 ஜூன் 10 ஆம் திகதி வவு­னி­யாவில் வைத்து இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சிக்­கி­யி­ருந்த நிலையில் வெலிக்­கந்த பகு­தியில் உள்ள புனர்­வாழ்வு மையத்தில் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்டு சமூ­க­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டவர்.

இதனை விட வினோத்­திடம் அப்­போது இரா­ணுவம் மேற்­கொண்ட விசா­ர­ணை­களின் பல­னாக புலி­களின் ஆயு­தங்கள் பலவும் மீட்­கப்­பட்­டி­ருந்­தன.

புனர்­வாழ்வின் பின்னர் வினோத் பெரி­தாக நல்ல நிலையில் இருந்­த­தாக சொல்­வ­தற்­கில்லை. ரமே­ஷூடன் சேர்ந்து காடுகளில் மிருக வேட்­டையில் ஈடு­ப­டு­வதும் பெறு­ம­தி­மிக்க மரங்­களை வெட்டி விற்­ப­து­மாக அவ­ரது நட­வ­டிக்­கைகள் தொடர்ந்­தன.

ரமேஷின் உத­வி­யா­ள­ராக செயற்­பட்டு வந்த வினோத்­துடன் ராம் (பெயர் மாற்­ற­ப்பட்­டுள்­ளது. ) தர்ஷன் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது.) சுதா (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது.) ஆகி­யோரும் சேர்ந்தே இந்த மரம் வெட்டும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வந்­தனர்.

இந்­நி­லையில் கடந்த மூன்று மாதங்­க­ளுக்கு முன்னர் இவர்கள் சட்ட விரோ­த­மாக வெட்­டப்­பட்ட மரங்கள் ஒரு தொகை­யுடன் பொலி­ஸாரின் பிடியில் சிக்­கி­ய­மையும் குறிப்­பி­டத்­தக்க விடயம்.

இந்த கிரா­மத்தின் கிராம சேவ­க­ராக கட­மை­யாற்றி வந்­தவர் நிர்ஷன் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது.) அர­சினால் விவசாயிகளுக்கென்று ஒரு­வ­ருக்கு 5 ஏக்கர் வீதம் வழங்­கப்­பட்ட நிலத்தை நிர்ஷன் தனது மனைவி உற­வி­னர்­களின் பெயர்களில் பதிவு செய்து 50ஏக்கர் நிலப்­ப­ரப்பை வஞ்­ச­க­மாக சுருட்­டிக்­கொண்டு விவ­சாயம் செய்து இலாபம் ஈட்டி வந்துள்ளார்.

இது நேர்­மை­யான விவ­சா­யி­யான நகு­லேஸ்­வ­ர­னுக்கு பிடிக்­க­வில்லை. விவ­சாய சங்­கங்­களின் உறுப்­பி­ன­ரான நகுலேஸ்வரன் நிர்­ஷனின் மோசடி தொடர்பில் தக­வல்­களை சேக­ரிக்­க­லானார். யார் யாரது பெயரில் நிர்ஷன் அந்த காணி­யினை பதிவு செய்­துள்ளார் என்ற விப­ரங்­களை நகு­லேஸ்­வரன் திரட்டும் பணியில் இறங்­கினார்.

இதன் போது கிரா­மத்தின் விவ­சாய சங்­க­மொன்றின் உறுப்­பி­ன­ருடன் நகு­லேஸ்­வரன் இது தொடர்பில் விசா­ரித்­துள்ளார். அந்த உறுப்­பினர் நிர்­ஷனின் நெருக்­கத்­துக்­கு­ரி­யவர். அவர் விசா­ரிப்­புக்­கான கார­ணத்தை கேட்­கவே மோசடி குறித்து ஜனாதிபதிக்கு அறி­விக்கப் போவ­தாக நகு­லேஸ்­வரன் குறிப்­பிட்­டுள்ளார்.

இதனை தொடர்ந்து நிர்­ஷ­னுக்கு அந்த தகவல் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதனை தொடர்ந்தே நகு­லேஸ்­வ­ரனை போட்­டுத்­தள்ளும் திட்டம் தீட்­டப்­பட்­டுள்­ளது.

நிர்­ஷனும் முன்னாள் பிர­பல புலி உறுப்­பி­னர்­களில் ஒருவர் .பாது­காப்பு பிரி­வி­னரின் கண்ணில் மண்ணை தூவிய வண்ணம் இருந்து வந்த இவர் முன்னர் ஒரு காலத்தில் புலி­களின் தலைவர் பிர­பா­கரன் அருகில் இருந்­தவர் என விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

இந்­தியா உள்­ளிட்ட வெளி­நா­டு­களில் புலி­களின் பிர­ப­லங்­க­ளான பால்ராஜ் போன்­றோ­ருடன் நிர்ஷன் ஒன்­றாக ஆயுத பயிற்சி பெற்­ற­வரும் கூட. கிராம சேவ­க­ராக அவர் மாறி­யதும் புலி­களின் திட்­டப்­ப­டி­யாகும்.

எனினும் அவர் புலி உறுப்­பினர் என எவ­ராலும் ஊகிக்க முடி­யாத அளவு தனது வாழ்­நாளை கடத்­தி­யுள்ளார். மூளையால் புலிக­ளுக்கு வேலை செய்து பழ­கிய சதி­கா­ர­ரான நிர்ஷன் தனக்கு எதி­ராக நகு­லேஸ்­வரன் ஜனா­தி­ப­திக்கு கடிதம் எழுத முன் நகு­லேஸ்­வ­ரனை தீர்த்துக் கட்ட தீர்­மா­னித்தார்.

அதனை நகு­லேஸ்­வ­ரனின் வீட்­டுக்கு அருகில் வசித்த ரமேஷைக் கொண்டே செய்­வ­தென நிர்ஷன் முடிவு செய்தார். சட்ட விரோத மரம் வெட்­டுதல் தொடர்பில் 3 மாதங்­க­ளுக்கு முன்னர் ரமேஷ் குழு­வினர் கைது செய்­யப்­பட்­டமை நகு­லேஸ்­வரன் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய ரக­சிய தக­வ­லாலாகும் என நிர்ஷன் தனது திட்­டத்­துக்கு ரமேஷை திசை திருப்பும் வித­மாக கதையை கட்டி அதனை ரமேஷின் காது­க­ளுக்கு ஏத்தி வைத்தார்.

பல இடங்­களில் நிர்ஷன் கூறிய அந்த கதை­களை நம்­பிய ரமேஷ் நகு­லேஸ்­வ­ரனை பழி­வாங்க சந்­தர்ப்பம் ஒன்­றுக்­காக காத்­தி­ருந்­துள்ளார்.

இந்­நி­லை­யில்தான் மிருக வேட்­டைக்கு தான் பயன்­ப­டுத்தும் கட்டுத்துவக்கு ஊடாக நகு­லேஸ்­வ­ரனை இலக்கு வைக்க ரமேஷ் திட்டம் தீட்­டி­யுள்ளான். எனினும் அந்த திட்­டத்தை நிரா­க­ரித்த நிர்ஷன் இந்த நேரத்தில் ஷொட்­கண்ணை பாவித்தால் வச­மாக சிக்கிக் கொள்வோம்.

T 56 ஒன்றால் இலக்கு வைத்தால் பழியை இரா­ணுவம் மீது போட்டு விட்டு நாம் தப்­பிக்­கலாம் என தனது கபட மூளையின் யோச­னையை முன்­வைத்­துள்ளார்.

ரமே­ஷுக்கு T56 ரக துப்­பாக்­கியை இயக்கத் தெரி­யாது. அத­னாலோ என்­னவோ வினோத் துப்­பாக்­கி­தா­ரி­யாக மாற வேண்டி ஏற்­பட்­டது. வினோத் சினைப்பர் ஆயுத பயிற்­சியை முடித்­த­வ­ரென்­பதால் இவ்­வா­றா­னது. எனினும் T 56 ரக துப்­பாக்­கி­யொன்று திட்­டத்­துக்கு தேவைப்­ப­டவே அதனை பெற்­றுக்­கொ­டுக்கும் பொறுப்பும் ரமே­ஷுக்கே கொடுக்­கப்­பட்­டது.

காட்டில் கைவி­டப்­பட்­டி­ருந்த T 56 ரக துப்பாக்கி யொன்றை ஒருவாறு ரமேஷ் தேடிக் கொடுக்க வினோத் அதனை சுத்தம் செய்து இயங்கு நிலைக்கு கொண்டு வந்தான். இவையனைத்தும் தயாரான பின்னர் கிராம சேவகர் நிர்ஷன் அவசரமாக வேலையை நிறைவுறுத்துங்கள் 50 000 ரூபா பணமும் தருகிறேன் என கூறவே நகுலேஸ்வரனின் உயிர் துப்பாக்கிதாரிகளால் பறிக்கப்பட்டது.

இதன்படி துப்பாக்கியால் வினோத் நகுலேஸ்வரனை இலக்கு வைக்க இராணுவத்தினரின் ரோந்துப் பிரிவு பிரதேசத்துக்கு வருகிறதா என ராமும் சுதாவும் உளவு பார்த்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் T 56 ரக துப்பாக்கியை ரமேஷின் கையில் கொடுத்த வினோத் ஏனைய இருவருடன் தப்பிச் சென்றான்.

பின்னர் ரமேஷ் துப்பாக்கியை காட்டில் வீசி விட்டு வழமையை போன்று நடவடிக்கையில் ஈடுபட்ட போதே பயங்கரவாத புலனய்வுப் பிரிவினரின் பிடியில் சிக்கிக் கொண்டான்.

உலகையே ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைத்த இந்த சம்பவம் குறித்து பக்க சார்பற்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டு கொலையுடன் தொடர்புடைய அறுவரையும் கைது செய்ததாக கூறும் பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண சந்தேக நபர்கள் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

–எம்.எப்.எம். பஸீர்–

(Thanks.. Ilakkiya)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த காதலியை கொன்ற வாலிபர்!!
Next post கயலுக்கு யு, மீகாமனுக்கு யு/ஏ!!