பிணங்களுடன் செல்ஃபி: 38 நோயாளிகளை தீர்த்துக்கட்டிய கொலைகார நர்ஸ் (வீடியோ இணைப்பு)!!

Read Time:2 Minute, 14 Second

nurse_arrested_002இத்தாலியை சேர்ந்த செவிலிய பெண்மணி ஒருவர் 38 நோயாளிகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியின் லுகோ (Luco) நகரில் உள்ள உம்பர்டோ மருத்துவமனையில் (Umbrto Hospital) டேனியலா போக்கியலி (Daniela Poggiali Age-42) என்ற பெண்மணி செவிலியராய் பணிபரிந்து வந்துள்ளார்.

இவர் தினசரி தனது வீட்டில் உள்ள கோபத்தை மருத்துவமனையில் உள்ள நோயாளியிடம் காண்பித்துள்ளார். இவரிடம் சாதாரணமாக வந்த நோயாளிகளுக்கு கூட வீரியம் அதிகமான மருந்துகளை ஊசி மூலம் ஏற்றி இதுவரை 38 நோயாளிகளை கொலை செய்துள்ளார்.

சமீபத்தில் ரோசா (78) என்ற மூதாட்டி உடலில் உள்ள சர்க்கரை அளவை தெரிந்து கொள்வதற்காக வந்தபோது, அவருக்கு பொட்டாசியம் கலந்த வீரியமிக்க ஊசிமருந்து ஒன்றை செலுத்தியுள்ளார்.

இதனால் ரோசாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் எதற்காக இத்தனை பேரையும் அவர் கொலை செய்தார்? என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையில் அவர் கூறியதாவது, எனக்கு நோயாளிகளை கவனித்து கொள்வது கடினமாய் இருந்தது என்றும் அவர்களின் தொல்லை தாங்க முடியாமல் இவ்வாறு செய்தேன் எனவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறுகையில், போக்கியலி அடிக்கடி பிணங்களின் அருகில் நின்று புகைப்படம் எடுக்க சொல்லி என்னிடம் கூறுவார், சில நேரம் சடலங்களுடன் சேர்ந்து நின்று தன்னை தானேயும் புகைப்படம் எடுத்து கொள்வார் என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயர் நீதிமன்ற தீர்ப்பு, மாகாண சபைக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்திருக்கிறது -“புளொட்” தலைவர் த.சித்தார்த்தன் (சிறப்புப் பேட்டி)!!
Next post பொள்ளாச்சியில் கொசுவத்தி சுருளால் பெண்ணின் உடையில் தீ: காப்பாற்ற சென்ற கணவரும் படுகாயம்!!