காக்கை தீவு பகுதியில் அனுமதி­யின்றி கொட்டப்பட்ட திண்மக்கழி­வுகள் பிரதேசசபையின் நடவடிக்கையால் அகற்றப்பட்டது.!!

Read Time:1 Minute, 59 Second

unnamed (32)பிரதேசசபையின் அனுமதியின்றி காக்கைதீவு பகுதியில் கொட்டப்பட்ட திண்மக்கழிவுகள் அதிகாரிகளின் தலையீட் டய­டுத்து மீண்டும் அவை உரிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்பட்டன.

வலி. தென்மேற்குப் பிரதேசத்தில் காக்கை தீவு பகுதியில் பிரதேசசபையின் அனுமதியின்றி தனியார் காணிகளில் பல்வேறு இடங்களில் திண்மக் கழிவுகள் கொட்டப்பட்டன. இதனால் சுற்றா­டலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் பொது மக்கள் தொற்று நோய்க்கு உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

உழவு இயந்திரங்கள் மூலம் கொண்டு வரப்படும் கழிவு­களே இவ்வாறு தனியார் காணிகளில் கொட்டப்படுவதாக பிர தேசசபையின் கவனத் துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் அண்மையில் உழவு இயந்திரம் ஒன்றின் மூலம் கொண்டுவரப்­பட்ட கழிவுகள் காக்கை தீவு பகுதியில் கொட்டப் படுவதாகக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து அங்கு விரைந்து பிரதேச சபை பதில் தவிசாளரும் பொது சுகாதாரப் பரிசோதகரும் குறித்த உழவு இயந்திரத்தை கையும் மெய்யுமாக பிடித்தனர்.

அத்துடன் கொட்­டப் பட்ட திண்மக்கழிவுகளை மீண்டும் உழவு இயந்திரத்தில் ஏற்றி உரிய இடத்தில் கொட் டுமாறு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் சட்டத்துக்கு முரணாக செயற்படும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சாரதிக்கு எச்சரிக்கை விடுவித்துள்ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தருண் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் 3 வார தடை!!
Next post திருநாவலூர் அருகே வீட்டில் தூங்கிய நர்சிங் மாணவியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது!!