கன்னியாகுமரி அருகே ஆடு மேய்க்க சென்ற பெண் கடத்தி கற்பழிப்பு: இலங்கை அகதி கைது!!
கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம், நரிக்குளம் பகுதியை சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர் நேற்று மாலை அந்த பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.
அவர் தனியாக நிற்பதை வாலிபர் ஒருவர் நோட்டமிட்டார். ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் அந்த பெண்ணை நெருங்கிய வாலிபர் அவரை அலேக்காக தூக்கி அருகில் உள்ள கால்வாய் கரைக்கு கொண்டு சென்றார். அங்கு பெண்ணின் வாயில் துணியை திணித்து அவரை கற்பழித்தார்.
அந்த பெண் இதை தடுக்க முயன்று வாலிபரை கையால் தாக்கினார். அப்போதுபெண்ணின் கையை வாலிபர் முறுக்கி பிடித்ததில் அவரது கை முறிந்தது. அவர் வலியால் அலறினார்.
சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் கால்வாய் கரைக்கு ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் வாலிபர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார்.
கால்வாய்க்குள் காயங்களுடன் கிடந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல்உதவி அளிக்கப்பட்டு பின்னர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதற்கிடையே தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி அந்த பெண் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணை கற்பழித்தது கொட்டாரம் பெருமாள்புரம் அகதிகள் முகாமைச் சேர்ந்த கரன் (வயது25) என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Average Rating