மதுக்கடையில் பீர் வாங்கும் காட்சியில் நடிப்பதா?: நயன்தாராவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி போராட்ட அறிவிப்பு!!

Read Time:3 Minute, 7 Second

8b70b840-4409-4664-b047-5553cc44f45d_S_secvpfநயன்தாரா டாஸ்மாக் மதுக்கடையில் பீர் பாட்டில்கள் வாங்குவது போன்ற வீடியோ படம் இணைய தளங்களில் பரவியது. வாட்ஸ் அப்களிலும் வந்தன. நிஜமாகவே பீர் வாங்கினாரா… என்று பலரும் படத்தைபார்த்து விவாதிக்க தொடங்கினர்.

இந்த நிலையில் நானும் ரவுடிதான் படத்தில் இடம் பெறும் காட்சி என்று தற்போது தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்குகிறார். தனுஷ் தயாரிக்கிறார். இந்த படத்துக்காக டாஸ்மாக் கடையில் நயன்தாரா பீர் வாங்குவது போன்ற காட்சியை படமாக்கினார். அதனை யாரோ திருட்டுதனமான மொபைல் கேமராவில் பதிவு செய்து இன்டர்நெட்டில் பரப்பியுள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

நயன்தாரா பீர் வாங்கும் காட்சிக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல இந்து மக்கள் கட்சி செயலாளர் வீரமாணிக்கம் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தமிழகத்தில் மதுவுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. பள்ளி கல்லூரி மாணவ–மாணவிகள் மதுவின் தீமைகளை விளக்கி பேரணிகளை நடத்துகிறார்கள். இந்த நிலையில் நயன்தாரா மதுக்கடைக்கு போய் பீர் வாங்குவது போன்ற காட்சியில் நடித்து இருப்பது மதுவுக்கு எதிரான போராட்டங்களை கொச்சைப்படுத்துவது போல் அமைந்து உள்ளது.

பெண்களை மது குடிக்க தூண்டுவது போன்றும் இக்காட்சி இருக்கிறது. தமிழகத்தில் மது குடித்து செத்து போன ஆண்களால் 20 லட்சம் பெண்கள் விதவையாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. தற்போது பெண்களும் மது குடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இதனால் கணவன், மனைவி மற்றும் குடும்ப உறவுகள் சிரழிகின்றன.

எனவே பெண்களை குடிக்க தூண்டுவது போல் உள்ள நயன்தாரா பீர் வாங்கும் காட்சியை படத்தில் வைக்க கூடாது. அக்காட்சியை நீக்க வேண்டும். இல்லா விட்டால் நயன்தாராவையும் அக்காட்சி இடம் பெறும் படத்தையும் எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சினிமாவில் தான் நான் ஹீரோ, நிஜ வாழ்க்கையில் கவுதமி தான் ஹீரோ: கமலஹாசன் பேச்சு!!
Next post கன்னியாகுமரி அருகே ஆடு மேய்க்க சென்ற பெண் கடத்தி கற்பழிப்பு: இலங்கை அகதி கைது!!