மிளகாய் தூளை தூவி சுங்கச்சாவடி ஊழியர்களிடம் ரூ.15 லட்சம் கொள்ளை!!

Read Time:1 Minute, 15 Second

f0685e32-a709-4814-968f-5f83b7032c86_S_secvpfஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம்பூர் நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் வசூலான ரூ.15 லட்சம் தொகையை வங்கியில் செலுத்துவதற்காக தலைமை ஊழியரும், கணக்கு அதிகாரியும் காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அந்த காரை வழிமறித்தனர். முன்கதவு கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்த அவர்கள் பணப்பையுடன் அமர்ந்திருந்த அதிகாரி ராம் பாபுவின் கண்களில் மிளகாய் தூளை தூவி நிலை குலைய வைத்தனர்.

உதவிக்கு வந்த தலைமை ஊழியர் சூரி பாபு என்பவரையும் தாக்கிய அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் பணப்பையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை பிடிக்க தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சின்னத்திரை நடிகர் ராஜ்கமல் நடிக்கும் மேல்நாட்டு மருமகன்!!
Next post கலப்பு திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம்: உ.பி. அரசு வழங்குகிறது!!