கேரளாவில் 50 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்!!

Read Time:1 Minute, 48 Second

3080928f-5606-436d-8d8f-55ca9b70e948_S_secvpfகேரள மாநிலம் மூவாற்று புழா பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன், (வயது 58). இவரது மனைவி சுஜாதா (50).

இருவருக்கும் கடந்த 1987 பிப்ரவரி 1–ந்தேதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதற்காக கணவன்–மனைவி இருவரும் பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றனர். இருந்தும் எந்த பிரயோஜனமும் இல்லை.

திருமணமாகி 28 ஆண்டுகள் முடிந்த நிலையில் அவர்கள் மூவாற்று புழா பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் பிறப்பு சிகிச்சை மைய டாக்டர் சபின் சிவதாஸ் என்பவரை சந்தித்தனர்.

அவர், சசிதரன்–சுஜாதா தம்பதியருக்கு குழந்தை பிறப்புக்கான நவீன சிகிச்சைகள் அளித்தார். இதில் சுஜாதா கர்ப்பமானார். அவரது 28–வது திருமண நாளன்று பிரசவம் நடந்தது.

இதில், 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என 3 குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறந்தன. தாயும், 3 குழந்தைகளும் நலமாக உள்ளனர். தற்போது குழந்தைகள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளன. பிரசவம் முடிந்ததும், 3 குழந்தைகளையும் அருகே படுக்க வைத்து அவற்றின் முகங்களை உற்றுப்பார்த்து சுஜாதா மகிழ்ச்சி அடைந்தார். 50 வயதுக்கு பிறகு தனக்கு 3 குழந்தைகள் ஒரே நேரத்தில் கிடைத்தது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துப்பாக்கியை காட்டி கணவரை கொன்றுவிடுவதாக மிரட்டல்: போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பெண் என்ஜினீயர் புகார்!!
Next post கூடலூர் அருகே பெண்ணை கொன்ற புலியை பிடிக்க 9 இடங்களில் கூண்டு!!