பன்றிக்காய்ச்சலுடன் போராடிய பெண்ணுக்கு டெல்லி ஆஸ்பத்திரியில் பிரசவம்: தாயும் சேயும் நலம்!!

Read Time:2 Minute, 35 Second

8ba22651-41ac-4519-8930-da875c049e6c_S_secvpfமுழு ஆரோக்கியத்துடன் உள்ள பெண்ணிற்கே பிரசவம் என்பது நரக வேதனை எனில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு அது எவ்வளவு கடினமான அனுபவமாக இருந்திருக்கும்?

புதுடெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் 28 வயது பெண் ஒருவர் ஏழு மாத கருவை சுமந்த நிலையில் கடந்த ஜனவரி 25-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது. மருத்துவர்கள் அந்த பெண்ணை எக்ஸ்-ரே பரிசோதனை செய்த போது நிம்மோனியா காய்ச்சலால் பாதித்திருப்பது தெரிய வந்தது. தொடர் பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதும் தெரிய வந்தது.

இதனால் அவரது உடல் அடிக்கடி குளிர்ந்து போகும். கடும் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர் மூச்சு விட முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார். இதனால் கருவில் இருந்த குழந்தைக்கு ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அவர் பிரசவ வலியால் துடித்தார். மருத்துவர்களுக்கு தாய் மற்றும் குழந்தையின் உயிரை காப்பாற்றுவது பெரும் சவாலாக இருந்தது.

நோயால் கடுமையாக அவதிப்படும் தாயால் ஒரு குழந்தையை பிரசவிக்க முடியுமா அதுவும் கருவுற்ற 32 வாரத்திற்குள் பிறக்கும் ஒரு குழந்தையை?, மேலும் அக்குழந்தைக்கு நுரையீரல் பிரச்சனையும் இருந்தது. பிரசவ அறையில் இருவரின் உயிரையும் காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் தீவிரமாக போராடினர். அந்த பெண்ணுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. ஸ்டிராய்ட் செலுத்தப்பட்டு பெரும் போராட்டத்திற்கு பிறகு குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.

தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 12 வயது சிறுமி கற்பழித்து, கொலை: பீகாரில் தொடரும் கொடூரம்!!
Next post அடுத்தவரின் மனைவியிடம் துணை ஜனாதிபதி மறைமுக லீலைகள்: கொந்தளிக்கும் மக்கள் (வீடியோ இணைப்பு)!!