அடுத்தவரின் மனைவியிடம் துணை ஜனாதிபதி மறைமுக லீலைகள்: கொந்தளிக்கும் மக்கள் (வீடியோ இணைப்பு)!!

Read Time:2 Minute, 3 Second

vice_president_002அமெரிக்க துணை ஜனாதிபதி பாதுகாப்பு துறை செயலாரின் மனைவியின் மிக அருகில் சென்றது குறித்து பலரும் விமர்சித்துள்ளனர்.
அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளராக பதவியேற்ற ஆஷ்டான் கார்டருக்கு(Ashton Carter) துணை ஜனாதிபதி ஜோ பிடன்(Joe Biden) பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

இந்த விழாவின்போது, மேடையில் ஆஷ்டான் கார்டரின் மனைவி ஸ்டீபனி கார்டரின்(Stephanie Carter) பின்புறமாக நின்ற ஜோ பிடன், அவரின் தோள்கள் மீது கைகளை வைத்து, காதுக்கு அருகில் வந்து ஏதோ கூறியுள்ளார்.

இந்நிலையில் மற்றொரு நபரின் மனைவிக்கு இத்தனை அருகிலா ஒரு துணை ஜனாதிபதி செல்வது? என பலரும் அவரை டுவிட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து டுவிட்டரில் நபர் ஒருவர் கூறுகையில், உலகிலேயே மிகவும் சந்தோஷமான வேலைகளில் ஒன்று அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பதவி தான் என கிண்டலடித்துள்ளார்.

இந்நிலையில் பென்டகன் அதிகாரிகள் கூறுகையில், ஆஷ்டான் கார்டர் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியவில்லை என்றாலும், பாதுகாப்பு துறையில் பல்வேறு அதிகாரிகள் பணியினை செய்து வந்துள்ளார்.

முதல் நாள் பணியில் சேர்ந்த போது உடன் வந்த மனைவி ஸ்டீபனி வழுக்கி விழுந்து விட்டார். அதனை மனதில் கொண்டே, அவரிடம் நலம் விசாரித்து தேற்றும் விதமாகவே அவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பன்றிக்காய்ச்சலுடன் போராடிய பெண்ணுக்கு டெல்லி ஆஸ்பத்திரியில் பிரசவம்: தாயும் சேயும் நலம்!!
Next post உங்கள் வாக்கை பயனுறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. -சிவநேசன் (பவன்)!!