கொரட்டூரில் குளிர்பானம் என நினைத்து எண்ணெய் குழந்தை சாவு!!

Read Time:1 Minute, 12 Second

3ad7963e-3e26-4415-bb1f-a68916fed25c_S_secvpfகொரட்டூர் கெங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி லட்சுமி (டெய்லர்). இவர்களது மகள் மகிஷா (5).

கடந்த 20–ந்தேதி பிரவீன் குமார் வேலைக்கு சென்று விட்டார். லட்சுமி வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார். மகிஷா வீட்டில் விளையாடி கொண்டு இருந்தாள்.

அப்போது அவள் தையல் எந்திரத்தின் மேல் பாட்டிலில் இருந்த எண்ணெயை குளிர்பானம் என நினைத்து குடித்து விட்டாள். உடனே மகிஷா மயங்கி கீழே விழுந்தாள்.

அவளை சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மகிஷா பரிதாபமாக இறந்தாள்.

இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலாயுதம்பாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது: ரூ.2.50 லட்சம் பறிமுதல்!!
Next post மேட்டூரில் பெண் உள்பட 3 பேர் மீது ஆசீட் வீச்சு: 7 பேர் கைது!!