திருச்சூர் அருகே மனைவியை சுட்டுக்கொன்று கணவன் தற்கொலை!!

Read Time:3 Minute, 3 Second

6bef50fb-5f10-481f-9c9b-98271de3edec_S_secvpfகேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஒலவக்கரை அருகேயுள்ள காந்தி கிராம பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம்(வயது 65). இவரது மனைவி சுஷ்மா(63). இருவரும் வெளிநாட்டில் வேலைபார்த்தனர். பின்னர் சொந்த ஊருக்கு திரும்பினர்.

தங்களது சம்பாத்தியத்தில் சொந்த ஊரில் நிலம் வாங்கியிருந்தனர். சொத்து தொடர்பாக கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் சுஷ்மா பக்கத்து தெருவில் உள்ள தனது தாயாருக்கு போன் செய்தார்.

‘நானும் எனது கணவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்யப்போகிறோம்’ என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

அதிர்ச்சி அடைந்த சுஷ்மாவின் தாயார் தனது மகனை அனுப்பி பார்த்து வரச்சொன்னார். அவரும் உடனே அங்கு சென்றார்.

சுஷ்மாவின் வீட்டுக்கதவு பூட்டப்பட்டிருந்தது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சி அடையச்செய்தது. முதுகில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சுஷ்மா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

மற்றொரு அறையில் சுப்பிரமணியன் மூளை சிதறிய நிலையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து திருச்சூர் போலீஸ் கமிஷனர் நிஷாந்தினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு போலீசாருடன் விரைந்து வந்தார்.

துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இறந்து கிடந்த கணவன்–மனைவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விசாரணை மேற்கொண்டார். முதல்கட்ட விசாரணையில் சுப்பிரமணியன் தனது மனைவி சுஷ்மாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு பின்னர் அவர் தனக்குத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

சுப்பிரமணியன் தனது பெயரில் லைசென்ஸ் பெற்று இரட்டைக்குழல் துப்பாக்கி வாங்கி வைத்திருந்தார். அந்த துப்பாக்கியே கணவன்–மனைவியின் உயிருக்கு எமனாக அமைந்து விட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேரளாவில் நள்ளிரவு வானத்தில் இருந்து பலத்த சத்தத்துடன் விழுந்த தீப்பிழம்பு: பொதுமக்கள் ஓட்டம்!!
Next post சிவகாசி அருகே 8–ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை!!