ஸ்பெயின் நாட்டில் சுரங்க பாதையில் ரெயில் கவிழ்ந்தது; 38 பேர் பலி

Read Time:1 Minute, 53 Second

Spain-rain.Accident.jpgசுரங்க பாதையில் அதிவேகத்தில் சென்ற ரெயில் கவிழ்ந்து 38 பேர் பலி யானார்கள். ஸ்பெயின் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ளது வாலன்சியா நகரம். இங்குள்ள ரெயில் நிலையத்தில் இருந்து பயணிகளை எடுத்துக்கொண்டு ஒரு மெட்ரோ சரஸ்வதி ரெயில் புறப்பட்டு சென்றது. ரெயில் பிளாசா நகருக்கும் ஜீசஸ் நகருக்கும் இடையே சென்ற போது சுரங்கப்பாதையில் சென்று கொண்டிருந்த போது அதன் வேகம் அதிகரித்தது. அதிவேகத்தில் சென்ற அந்த ரெயில் ஒரு வளைவில் திரும்பிய போது அதன் சக்கரங்களில் ஒன்று திடீர் என்று உடைந்து விட்டது.

இதனால் அந்த ரெயிலில் 2 பெட்டிகள் கவிழ்ந்தன. பல மீட்டர் தூரத்துக்கு இந்த ரெயில் பெட்டிகள் இழுத்துச்செல்லப்பட்டன. கவிழ்ந்த ரெயில் பெட்டிகளில் தான் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதில் இந்த பெட்டில் இருந்தவர்களில் 38 பேர் பலியாகிவிட்டனர். 40-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். பலியானர்களின் ரெயில் என்ஜின் டிரைவரும் அடங்கும். நிறைமாத ஒரு கர்ப்பிணி ஒருத்தியும் இதில் பரிதாபமாக பலியானார்.

ரெயில்பெட்டிகளில் குத்துயிராக கிடந்தவர்களை தீயணைப்புபடையினர் அரும்பாடுபட்டுமீட்டனர். காயம் அடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்காணிப்புக் குழுவை மாற்றியமைக்க வேண்டும்: சு.ப.தமிழ்ச்செல்வன்
Next post இந்திய எம்.பிக்களை அனுப்ப கோரிக்கை