மனைவி உடனான கள்ளக்காதலை துண்டிக்க கூறியதால் தந்தையுடன் சேர்ந்த கணவரை தாக்கிய வாலிபர்!!

Read Time:2 Minute, 14 Second

92e31fb8-9897-45b8-8532-3ae7420a9aa2_S_secvpfகோவை மாவட்டம் ஆனைமலை அருகேயுள்ள திவான்சாபுதூரை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 34). மலைவாழ் மக்கள் இனத்தவர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மணியன் (30). இவருக்கும் வேலுசாமியின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

இதையறிந்த வேலுசாமி தனது மனைவியுடனான தொடர்பை துண்டித்துக் கொள்ளும்படி மணியனை பலமுறை எச்சரித்து வந்தார். இந்த நிலையில் மணியன் நேற்று வேலுசாமியின் வீட்டுக்கு சென்றார்.

வீட்டில் இருந்த வேலுசாமி, மணியனை கண்டதும் ஆத்திரமடைந்தார். என் எச்சரிக்கையையும் மீறி மீண்டும் என் வீட்டின் பக்கம் ஏன் வந்தாய்? என்று கேட்டார். இதனால் வேலுசாமிக்கும், மணியனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதும்.

சத்தம் கேட்டு மணியனின் தந்தை கிட்டானும் அங்கு வந்தார். மணியனும், கிட்டானும் சேர்ந்து வேலுசாமியை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் வேலுசாமி படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் வருவதை கண்டதும் இருவரும் அங்கிருந்து தப்பித்து சென்றனர்.

படுகாயமடைந்த வேலுசாமி சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆனைமலை போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தகவலறிந்ததும் கிட்டானும், மணியனும் தலைமறைவாகிவிட்டார்கள். அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுராந்தகம் அருகே பாக்கெட் சாராயம் விற்ற 9 பெண்கள் கைது!!
Next post காளஹஸ்தி அருகே சிறுவனை கடத்தி கோவில் திருவிழாவில் விற்க முயன்ற பெண் கைது!!