காளஹஸ்தி அருகே சிறுவனை கடத்தி கோவில் திருவிழாவில் விற்க முயன்ற பெண் கைது!!

Read Time:3 Minute, 32 Second

5c8aeae8-0db9-4a29-9359-655418ec07c1_S_secvpfஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த பையப்பகாரிபள்ளியை சேர்ந்தவர் சோமநாத். அவரது மனைவி நரசிம்மா. அவர்களுக்கு 3 வயதில் எலேசியா என்ற மகன் உள்ளார்.

சோமநாத், பி.கொத்தகோட்டாவில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் பெட்டிக்கடை வைத்து குடும்பத்தை நடத்தி வருகின்றார். கடந்த மாதம் 27–ந்தேதி சிறுவன் எலேசியா பணிமனை அருகில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவனை திடீரென காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுபற்றி பெற்றோர் பி.கொத்தகோட்டா போலீசில் மகன் மாயமாகி விட்டதாக புகார் செய்தனர். சிறுவனின், அடையாளங்களை கூறி புகைப்படத்தையும் கொடுத்தனர். சிறுவனை கடைசியாக பார்த்த நேரத்தில் பணிமனை அருகே சந்தேகப்படும்படியாக ஒரு ஆணும், பெண்ணும் நின்றிருந்ததாகக்கூறி அவர்களின் அடையாளங்களையும் போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.

அதனை அடிப்படை ஆதாரங்களாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி பல்வேறு இடங்களில் சிறுவனை தேடி வந்தனர். இதுதொடர்பாக பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அந்த போலீஸ் நிலையங்களுக்கு சிறுவனின் புகைப்படமும் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மதனப்பள்ளி போலீசார் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கே.ஆர்.புரத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மனைவி சாந்தகுமாரியை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அவர் சிறுவன் எலேசியாவை பி.கொத்தகோட்டாவில் இருந்து பஸ்சில் திருப்பதிக்கு கடத்தி சென்றதாக கூறினார்.

திருப்பதியில் சிறுவனை விற்க முயன்றபோது, அவனை யாரும் விலைக்கு வாங்காததால், மதனப்பள்ளி வழியாக கடத்தி சென்று கர்நாடக மாநிலம் சிந்தாமணி தாலுகா கைவாரம் கிராமத்தில் நடக்கும் திருவிழாவில், எலேசியாவை ஒருவரிடம் பணத்துக்காக விற்க முயன்றதாக கூறினார்.

அதையடுத்து, போலீசார் சாந்தகுமாரியை கைது செய்தனர். அவரிடம் இருந்த சிறுவன் எலேசியாவை மீட்டு, அவனின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கைதான சாந்தகுமாரி இதற்கு முன்பு கோலார், பங்காருபேட்டை பகுதிகளில் இரு குழந்தைகளை கடத்தியதாக அவர் மீது போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. கோலார் மாவட்டம் புல்பேட்டை பகுதியில் குழந்தை கடத்தல் வழக்கில் கைதாகி 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவி உடனான கள்ளக்காதலை துண்டிக்க கூறியதால் தந்தையுடன் சேர்ந்த கணவரை தாக்கிய வாலிபர்!!
Next post நேருக்கு நேர் மோதிய ஹெலிகொப்டர்கள்: பலியான விளையாட்டு வீரர்கள் (வீடியோ இணைப்பு)!!