நேருக்கு நேர் மோதிய ஹெலிகொப்டர்கள்: பலியான விளையாட்டு வீரர்கள் (வீடியோ இணைப்பு)!!

Read Time:3 Minute, 1 Second

franceplayer_helicopter_002இரண்டு ஹெலிகொப்டர்கள் நேருக்கு நேராக மோதிய விபத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 விளையாட்டு வீரர்கள் உள்பட 10 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ’Dropped’ என்ற நிகழ்ச்சியை பிரபலங்களை கொண்டு ஒளிப்பரப்பி வருகிறது.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வகையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 பிரபல விளையாட்டு வீரர்கள் மற்றும் 7 நபர்கள் அர்ஜெண்டினா நாட்டிற்கு சென்றுள்ளனர்.

La Rioja என்ற மாகாணத்தில் உள்ள Villa Castelli என்ற மலைப்பகுதியில் இரண்டு ஹெலிகொப்டர்களில் பறந்தவாறு நேற்று படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

வானத்தில் பறந்துகொண்டிருந்த போது ஹொலிகொப்டர்கள் இரண்டும் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதி கீழே விழுந்துள்ளது.

இந்த விபத்தில் இரண்டு ஹெலிகாப்டர்களிலும் பயணம் செய்த அனைவரும் உடல் கருகி இறந்தனர்.

இந்த விபத்து குறித்து செய்தி வெளியிட்ட பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே, எதிர்பாராத நடந்த இந்த விபத்தில் தனது நாட்டு குடிமகன்கள் 10 பேர் இறந்தது மிகவும் வேதனையாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல விளையாட்டு வீரர்களான Florence Arthaud(57), Camille Muffat(25) மற்றும் Alexis Vastine(28) ஆகியோர் இறந்துள்ளதாக உறுதிபடுத்தியுள்ளார்.

விபத்து நடந்த பகுதியில் காலநிலை நன்றாகவே இருந்துள்ளது என்றும் ஹெலிகொப்டர்கள் விபத்துக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

விபத்தில் பலியான Camille Muffat என்ற நீச்சல் விளையாட்டு வீரர், 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு தங்க பதக்கம் உள்ளிட்ட 3 பதக்கங்களை வென்றுள்ளார்.

குத்துச்சண்டை வீரரான Alexis Vastine 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

படகு போட்டி வீரரான Florence Arthaud 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற Route du Rhum படகு போட்டியில் வென்று முதலிடம் பெற்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காளஹஸ்தி அருகே சிறுவனை கடத்தி கோவில் திருவிழாவில் விற்க முயன்ற பெண் கைது!!
Next post திருப்பதி மருத்துவ கல்லூரி டாக்டர் மீது பெண் டாக்டர் செக்ஸ் புகார்!!