திண்டுக்கல் அருகே சொகுசு வாழ்க்கைக்காக பாட்டியை கொன்ற அண்ணன்–தம்பி: அவமானத்தால் பெற்றோர் தற்கொலை!!

Read Time:5 Minute, 45 Second

b523a828-30b7-4a36-9fe3-2fe9e57b0726_S_secvpfதிண்டுக்கல் அருகே சொகுசு வாழ்க்கைக்காக பாட்டியை கொலை செய்த பேரன்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் அவமானம் அடைந்த அவர்களது பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

திண்டுக்கல் அருகே சின்னாளபட்டி சன் மார்க்க சங்க வடக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜகுமாரி (வயது 65). ஓய்வுபெற்ற தையல் ஆசிரியை. திருமணமாகாத இவர் தனியாக வசித்து வந்தார்.

கடந்த 5–ந்தேதி இரவு இவர் மர்மமான முறையில் வீட்டிற்குள் இறந்து கிடந்தார். இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவரது அக்காள் மகன் ஏகாம்பரம், ராஜகுமாரியின் செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ் தகவலை பார்த்தார்.

6–ந்தேதி அதிகாலை 4 மணிக்கு வந்த அந்த எஸ்.எம்.எஸ்சில் ராஜகுமாரியின் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.1900 என இருமுறை பணம் எடுத்ததற்கான தகவல் இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஏகாம்பரம் அதுபற்றி சின்னாளபட்டி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் ராஜகுமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ராஜகுமாரியின் வங்கி கணக்கு பணம் எடுக்கப்பட்ட ஏ.டி.எம் மையத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர்.

அதில் சம்பவத்தன்று அதிகாலை 4 மணி அளவில் குல்லா அணிந்திருந்த ஒருவர் பணம் எடுத்த காட்சி பதிவாகி இருந்தது. அதனை கொண்டு விசாரணை நடத்தியதில் ஆசிரியை ராஜகுமாரியை அவரது பேரன்களே பணத்திற்கு ஆசைப்பட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது.

ராஜகுமாரியின் அக்காள் பூபதியம்மாள் என்பவரின் மகள் கவுரி. இவரது மகன்கள் கோடீஸ்வரன் (வயது 23), ஞானமணிகண்டன் (21). இவர்களில் கோடீஸ்வரன் சென்னையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். மணிகண்டன் சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.

கடந்த 2 வாரமாக அண்ணன்–தம்பிகள் 2 பேரும் வேலைக்கும், கல்லூரிக்கும் செல்லாமல் ஜாலியாக ஊர் சுற்றியுள்ளனர்.

கடந்த 4–ந்தேதி இருவரும் தேனி வந்தனர். வீட்டிற்கு செல்லாமல் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். கையிலிருந்த பணம் செலவாகி விட்டதால் நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு மறுநாள் நள்ளிரவு 2 மணி அளவில் சின்னாளபட்டியில் உள்ள பாட்டி ராஜகுமாரி வீட்டிற்கு வந்தனர். அவர்களுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு ராஜகுமாரி தனியறையில் படுத்து தூங்கினார். அப்போது அண்ணன்–தம்பி இருவரும் பீரோவில் இருந்த ஏ.டி.எம் கார்டு மற்றும் ரூ.3 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டனர்.

இந்த விசயம் தெரியவந்து காட்டிக்கொடுத்துவிடுவார் என்ற அச்சத்தில் தூங்கிக்கொண்டிருந்த பாட்டி ராஜகுமாரியை தலையணையால் அமுக்கி கொலை செய்தனர். அங்கிருந்து தப்பிய அவர்கள் சின்னாளபட்டி ஏ.டி.எம்.மில் ராஜகுமாரியின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளனர். அவர்களை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அவர்கள் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இதனால் அவமானமடைந்த கோடீஸ்வரன், ஞானமணிகண்டன் பெற்றோர்கள் வனராஜா (52)– கவுரி (43) ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.

ராஜகுமாரி இறந்த செய்தியை கேட்டு கவுரியும், வனராஜாவும் சின்னாளபட்டி வந்தனர். அப்போது ராஜகுமாரியை கொன்றது தங்களது மகன்கள்தான் என்று தெரிய வந்ததும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். அவமானப்பட்ட அவர்கள் வத்தலக்குண்டு எழுவனம் பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்.

சோகத்தில் இருந்த கணவன்–மனைவி 2 பேரும் விஷம் குடித்துவிட்டு வைகை கால்வாயில் குதித்து உயிரை மாய்த்தனர். தேனி பழனிசெட்டிபட்டியை சேர்ந்த வனராஜா அங்கு ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்.

இந்த சம்பவங்களால் சின்னாளபட்டி, வத்தலக்குண்டு பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவை காவலாளி கொலை: மகளை சித்ரவதை செய்ததால் மருமகனை கொலை செய்தேன்-மாமனார் வாக்குமூலம்!!
Next post தரங்கம்பாடி அருகே மாணவிக்கு செக்ஸ் தொல்லை: ஆசிரியர் சஸ்பெண்டு!!