தரங்கம்பாடி அருகே மாணவிக்கு செக்ஸ் தொல்லை: ஆசிரியர் சஸ்பெண்டு!!

Read Time:2 Minute, 37 Second

dbabe222-f276-4f86-a8ee-60d445149519_S_secvpfநாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்கடையூர் ஆணைக்கோவிலில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு 10–ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்த பாலாஜி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளிக்கு திரண்டு வந்து பிரச்சினையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஆசிரியர் பாலாஜியை சஸ்பெண்டு செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.

இதே பள்ளியில் கம்ப்யூட்டர் ஆசிரியராக வேலை பார்க்கும் ஒருவருக்கும் அலுவலக பெண் ஊழியர் ஒருவருக்கும் காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்தும் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இவர்களது காதல் விவகாரம் மாணவர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதனை தொடந்து கம்ப்யூட்டர் ஆசிரியர் மற்றும் பெண் ஊழியரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இப்பள்ளியின் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது. இந்த விவகாரம் அங்கு சென்றது. இதனை தொடர்ந்து பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வரையும் சஸ்பெண்டு செய்து பள்ளி தலைமை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. தரங்கம்பாடி பகுதியில் பள்ளி மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருவதாகவும், இதில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திண்டுக்கல் அருகே சொகுசு வாழ்க்கைக்காக பாட்டியை கொன்ற அண்ணன்–தம்பி: அவமானத்தால் பெற்றோர் தற்கொலை!!
Next post உலகில் முதன்முறையாக ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சை: தென்னாப்பிரிக்காவில் சாதனை-இளைஞர்களுக்கு வரப்பிரசாதம்!!