ஏத்தாப்பூரில் நண்பரின் மனைவியுடன் நிர்வாணமாக ஓடிய வாலிபர்!!

Read Time:3 Minute, 37 Second

9c3b72be-2894-4531-9b4d-cb7f9f5ce099_S_secvpfசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஏத்தாப்பூர் கடை வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக உள்ளார். இவரது மனைவி ரேவதி (28). இவரது சொந்த ஊர் திட்டக்குடி ஆகும்.

ரேவதிக்கும், நாமக்கல் மாவட்டம் மெட்டலாவை சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது வெங்கடேசுக்கு தெரிய வரவே அவர் மனைவியை சத்தம் போட்டார். இது பற்றி ரேவதி விக்னேஸ்வரனிடம் கூறினார்.

நேற்று ஏத்தாப்பூர் வந்த விக்னேஸ்வரன் நேராக வெங்கடேஷ் வேலை பார்க்கும் தொழிற்சாலைக்கு சென்று அவரை அழைத்து வந்தார். நான் உன் மனைவியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை என்றும், இருவரும் நண்பர்களாகத் தான் பழகினோம் என்றும் கூறினார். இனிமேல் நாமும் நண்பர்களாக இருப்போம் என்றும் கூறினார்.

இதனால் 2 பேரும் வீட்டுக்கு வந்தனர். அங்கு இரண்டு பேரும் மது குடித்தனர். பின்னர் ரேவதி சமைத்து போட்ட உணவை சாப்பிட்டனர். போதை மயக்கத்தில் இருந்த விக்னேஸ்வரன் நிர்வாண நிலைக்கு சென்றார். ரேவதியும் நிர்வாணமாக இருந்தார். இதை பார்த்த வெங்கடேஷ் கொடுவாளை எடுத்து கொண்டு அவரை வெட்ட ஓங்கினார். அப்போது துணிகளை கையில் எடுத்துக் கொண்டு விக்னேஸ்வரன் தெருவில் நிர்வாணமாக ஓடினார். அவரை பிடிக்க முடியவில்லை.

பின்னர் வெங்கடேஷ் மனைவியை கத்தரியால் வெட்ட முயன்றார். அவரும் நிர்வாணமாக ரோட்டில் ஓடினார். வாலிபரும் பெண்ணும் நிர்வாணமாக ஓடுவதை பார்த்த அந்தப் பகுதி மக்கள் திரணடு வந்து பெண்ணுக்கு நைட்டியை கொடுத்து அணிய வைத்தனர். விக்னேஸ்வரன் ஒரு மரத்துக்கு அடியில் சென்று துணிகளை உடுத்திக்கொண்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சைக்கு சேர்ந்தார். தன்னை வெங்கடேஷ் என்பவர் தாக்கிவிட்டதாக அவர் டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் கூறினார்.

ஏத்தாப்பூர் போலீசார் அவரிடம் வாக்குமூலம் பெற சென்றபோது அவர் வழக்கு எதுவும் வேண்டாம் என்றும், தான் கீழே விழுந்து காயம் அடைந்து விட்டதாகவும் கூறினார். இதனால் போலீசார் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். பின்னர் விக்னேஸ்வரன் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து இது வரை ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிகிச்சைக்கு வந்த பெண்ணை கற்பழித்த டாக்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!!
Next post ஸ்ருதியுடன் லிப் டு லிப்பா! தெரித்து ஓடிய நடிகர்!!