விளாத்திகுளம் அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்!!

Read Time:1 Minute, 41 Second

5ca84e37-11ce-448d-b200-97ff38cb9639_S_secvpfதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள துலுக்கன்குளத்தை சேர்ந்தவர் காயத்ரி (வயது14) பெயர் மாற்றப்பட்டுள்ளது. 8–ம் வகுப்பு மாணவியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாரீஸ்வரன் (22) என்பவருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற இருந்தது.

மாணவியின் திருமணம் குறித்து தூத்துக்குடியில் உள்ள குழந்தை தடுப்பு மையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விளாத்திகுளம் தாசில்தார் செல்வகுமார் மற்றும் போலீசார் துலுக்கன்குளம் கிராமத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து இரு வீட்டாரும் விளாத்திகுளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு வைத்து போலீசார் அவர்களிடம் மணப்பெண்ணுக்கு 18 வயது நிரம்பியவுடன் திருமணம் நடத்தி கொள்ளுங்கள் என அறிவுறுத்தப்பட்டது.

இதற்கு இரு வீட்டாரும் எழுத்து பூர்வமாக போலீசாரிடம் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து சிறுமிக்கு இன்று நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காங்கயம் அருகே விவசாயி வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது: நகை-பணம் மீட்பு!!
Next post நாட்டறம்பள்ளி அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி!!