நாகர்கோவிலில் 8–ம் வகுப்பு மாணவனை கடத்தி ஓரினச்சேர்க்கை: பட்டதாரி வாலிபர் கைது!!

Read Time:2 Minute, 59 Second

a6920243-0b0e-4860-9711-d23e857ad38f_S_secvpfநாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 13–ந் தேதி மாலை மாணவன் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இருளப்பபுரத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 22) மற்றும் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். திடீரென அவர்கள் மாணவனை தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு இழுத்து சென்று ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி உள்ளனர். இதற்கு மாணவன் மறுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் உள்பட 3 பேரும் சேர்ந்து மாணவனின் கன்னம் மற்றும் கைகளில் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த மாணவன் அலறித்துடிக்கவே, சந்தோஷ் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். காயங்களுடன் வீட்டுக்கு சென்ற மாணவனிடம் பெற்றோர் விசாரித்த போது மாணவன் தனக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லி அழுதான். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் விசாரணை நடத்தினார்.

அப்போது மாணவனை இதற்கு முன்பு பல முறை சந்தோஷ் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று செல்போனில் ஆபாச படத்தை காட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியதும் தெரிய வந்தது. மேலும், சந்தோஷ் அந்த பகுதி கல்லூரி மாணவிகளுக்கு காதல் கடிதத்தை கொடுக்குமாறும் மாணவனை மிரட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் சந்தோசை கைது செய்தனர். அவர் மீது கடத்தல், தாக்குதல், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டம் 2012–ன் கீழ் வழக்குபதிவு செய்யப் பட்டுள்ளது. இச்சம்பவத்தில் சந்தோசின் நண்பர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கைதான சந்தோஷ் பட்டதாரி ஆவார். இவர் தற்போது திருச்சியில் சாட்டர்டு அக்கவுண்டன்ட் படிப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுரை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி!!
Next post கள்ளக்காதலை கண்டித்ததால் 80 வயது மாமனார் மீது மருமகள் பாலியல் புகார்: போலீசார் சமரசம்!!