கள்ளக்காதலை கண்டித்ததால் 80 வயது மாமனார் மீது மருமகள் பாலியல் புகார்: போலீசார் சமரசம்!!

Read Time:3 Minute, 5 Second

ef75b34d-3df0-460e-8c50-74be89590bc3_S_secvpfசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சக்கர செட்டியப்பட்டி புதுக்கடை காலனி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (80). இவர் தனது மனைவி கந்தம்மாளுடன் தனியாக சக்கர செட்டியப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மகன் கோவிந்தன் கூலி வேலை செய்து வருகிறார். காடையாம்பட்டியை அடுத்த பொம்மியம்பட்டியை சேர்ந்த கீதா என்ற பெண்ணை மகன் கோவிந்தனுக்கு திருமணம் செய்து வைத்தார்.

மாரியப்பன் வீட்டின் அருகே அவரது மகன் கோவிந்தன் மற்றும் அவரது மருமகள் கீதா (26) ஆகியோர் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தனர். கோவிந்தன் கூலி வேலைக்கு சென்ற பின்பு இவரது மருமகள் கீதாவுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பழனி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர். இவர்களின் கள்ளக்காதல் மாமனார் மாரியப்பனுக்கு தெரியவந்தது. அவர் மருமகள் கீதாவை கண்டித்தார். இதனால் மாமனார்–மருமகள் இடையே சண்டை வந்தது. அப்போது மாமனாரிடம் மருமகள் கீதா உண்னை சும்மா விடமாட்டேன் என்று கூறி ஓமலூர் காவல் நிலையத்தில் 80 வயது மாமனார் மாரியப்பன் மீது புகார் கொடுத்தார். மாமனார் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுப்பதாக அந்த புகார் மனுவில் கூறி இருந்தார்.

இது குறித்து ஓமலூர் சப்–இன்ஸ்பெக்டர் செங்கோடன் விசாரணை நடத்தினார். அப்போது மருமகளின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட 80 வயது மாமனார் மீது பொய்யான புகார் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து முதியவரின் மகன் கோவிந்தனிடம் சப்–இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினர். இனி மேல் எது நடந்தாலும் என்னுடைய அப்பா மாரியப்பன் கண்டு கொள்ளக்கூடாது என்று கூறியதை தொடர்ந்து இரு தரப்பினரிடமும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று கூறி எழுத்து பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு அறிவுரை கூறி அவர்களை சப்–இன்ஸ்பெக்டர் அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவத்தால் மன வேதனை அடைந்த முதியவர் மற்றும் அவரது மனைவி மனம் நொந்து சென்றனர்.

கள்ளக்காதலை தட்டி கேட்ட 80 வயது மாமனார் மீது பொய்யாக புகார் கொடுத்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாகர்கோவிலில் 8–ம் வகுப்பு மாணவனை கடத்தி ஓரினச்சேர்க்கை: பட்டதாரி வாலிபர் கைது!!
Next post உதவி கமிஷனர் நடத்திய ஆபாச ஆடியோ வெளியானது எப்படி?