செருப்பு மாலையுடன் கழுதை மீது நிர்வாண ஊர்வலம்: கற்பழிப்பு குற்றவாளிக்கு கிராம மக்கள் அளித்த வினோத தண்டனை!!

Read Time:3 Minute, 15 Second

0e2ac906-88f4-4e9e-a3d9-b2de9c158d81_S_secvpfபுகார், தேடுதல் வேட்டை, கைது, விசாரணை, தண்டனை என சினிமா பாணியில் நீதிக்காக காத்து கிடக்காமல் சட்டத்தை தங்களின் கைகளில் எடுத்துக்கொண்ட மராட்டிய மாநில மக்கள் 15 வயது சிறுமியை கற்பழித்த வாலிபரை நிர்வாணக் கோலத்தில் செருப்பு மாலையிட்டு, கழுதையின் மீது அமரவைத்து ஊர்வலமாக அழைத்துச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்குள்ள அஹமத்நகர் மாவட்டத்தின் வம்போரி கிராமத்தை சேர்ந்த சுபம் பார்டியா(19) என்ற வாலிபன், அதே கிராமத்தை சேர்ந்த வேறொரு ஜாதியை சேர்ந்த சுமார் 15 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளான். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்த சுபம், அந்த காட்சிகளை வெளியே பரப்பி விடுவேன் என மிரட்டியே தன்னை பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டதாக பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறினாள்.

இந்த சம்பவத்தில் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்ட பெண்ணின் உறவினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டப்பட்ட வாலிபரை பிடித்து, நிர்வாணப்படுத்தி, கழுத்தில் செருப்பு மாலையை அணிவித்து, கழுதை மீது அமர வைத்து கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். இந்த அநியாயத்தை தட்டி கேட்ட வாலிபனின் பெற்றோரையும், உறவினர்களையும் தாறுமாறாக அடித்து துவைத்து எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த உள்ளூர் போலீசார், சிறுமியின் உறவினர்கள் 17 பேரை கைது செய்த பிறகு, சுபம் பார்டியா தன்னை மிரட்டி கற்பழித்து விட்டதாக நேற்றிரவு அந்த சிறுமி போலீசில் புகார் அளித்துள்ளார்.

‘விபரம் அறியாத சிறுமியை ஆசை காட்டியோ, ஏமாற்றியோ, மிரட்டியோ கற்பழிப்பது குற்றம்தான். அந்த குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டியவன்தான். எனினும், உயர்ந்த ஜாதி-தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாட்டின் அடிப்படையில் சிறுபான்மை மக்களின் மீது மேலாதிக்கவாதிகள் நடத்தும் இதைப்போன்ற காட்டு தர்பார்கள் நாகரிகம் அடைந்த சமுதாயத்துக்கு ஏற்புடையது அல்ல’ என அந்த வாலிபனின் உறவினர்கள் குமுறுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) இந்திய பெண்ணின் முதல் ஓரினச் சேர்க்கை திருமணம்!
Next post காளஹஸ்தி அருகே மாணவிகளை மசாஜ் செய்யும்படி வலியுறுத்திய ஆசிரியருக்கு அடி–உதை!!