வேர்க்கிளம்பி அருகே ரூ.25 லட்சத்துக்கு மண்ணுளி பாம்பை விற்பனை செய்ய முயன்ற 2 வாலிபர்கள் கைது!!

Read Time:5 Minute, 9 Second

6faa88e7-21b5-455c-ad43-38f45e191d23_S_secvpfயானை தந்தம், புலி நகம் வரிசையில் மண்ணுளி பாம்புக்கு தனி விஷேசம் உண்டு, வீட்டில் மண்ணுளி பாம்பு இருந்தால் செல்வம் பெருகும் என கூறி மண்ணுளி பாம்பை லட்சக்கணக்கில் விற்று சம்பாதிக்கும் மோசடி பேர் வழிகள் இருக்கிறார்கள்.

இவ்வாறாக மண்ணுளி பாம்பை பிடித்து இன்டர்நெட் மூலம் விற்க முயன்ற 2 பேரை நாகர்கோவில் வனத்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்த விவரம் வருமாறு:–

குமரி மாவட்டம் வேர்க்கிளம்பி கண்ணனூரை சேர்ந்தவர் சுரேஷ்(வயது22). இவரும், மேக்கோடு கல்லன் குழியை சேர்ந்த ஜான்ராஜ்(29) என்பவரும் சேர்ந்து கல்லன் குழி சானல்கரை பகுதியில் ஒரு மண்ணுளி பாம்பை பிடித்துள்ளனர்.

பின்னர் இந்த பாம்பை விற்பதற்காக இன்டர்நெட்டில் விளம்பரம் செய்துள்ளனர். இதனை நாகர்கோவிலை சேர்ந்த வனஆர்வலரும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான டேவிட்சன் என்பவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்களும் இன்டர்நெட்டில் விளம்பரத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே மண்ணுளி பாம்பு பிடித்து வைத்திருப்பவர்களை கையும், களவுமாக பிடிக்க திட்டம் தீட்டினர்.

இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜி விஸ்வநாதன், உதவி கோட்ட வன பாதுகாப்பு அலுவலர் கோபால்தாஸ் ஆகியோர் உத்தரவுப்படி மண்ணுளி பாம்பு வைத்திருப்பவர்களை பிடிக்க வனசரக அலுவலர் (பயிற்சி) சிவராம் தலைமையில் வனவர் ராஜகோபாலன், அருண், பிரவீன், வனகாப்பாளர் சுந்தர்ராஜ், மணிகண்டன், ரவி ஆகியோர் கொண்ட தனிக்குழு அமைத்தனர்.

இந்த தனிக்குழுவினர் நேற்று மாலை டேவிட்சன் மூலம் சுரேஷ் மற்றும் ஜான் ராஜூக்கு போன் செய்து நேற்று அவர்களை தக்கலை பஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். அதன்படி அங்கு வந்த சுரேசும், ஜான் ராஜூம் மண்ணுளி பாம்பை மாத்தூர் தொட்டிப்பாலம் பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக கூறி வன சரக அலுவலர் சிவராமை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர்.

அங்கு மண்ணுளி பாம்பை நேரில் பார்த்ததும் இருவரும் ரூ.25 லட்சம் தருமாறு கேட்டனர். அப்போது வனசரக அலுவலர் சிவராம் தனி குழுவினருக்கு சிக்னல் தெரிவித்தார். உடனே அங்கு மறைந்து நின்ற தனிக்குழுவினர் பாய்ந்து சென்று சுரேஷ், ஜான்ராஜை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மண்ணுளி பாம்பை மீட்டதோடு, இருவரது மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:–

மண்ணுளி பாம்புக்கு அதிசய மருத்துவ குணம் உள்ளது எனக்கூறி மோசடி பேர் வழிகள் அதனை பிடித்து விற்று லட்கக்கணக்கில் சம்பாதிக்க நினைக்கின்றனர். அவ்வாறு மண்ணுளி பாம்புகளை பிடித்து விற்பது கடுமையான தண்டனைக்குரியது.

மேலும், மருத்துவ ரீதியாக மண்ணுளி பாம்புக்கு எந்த சிறப்பும் கிடையாது என்பது தான் உண்மை. எனவே இது போன்றவர்களிடம் யாரும் ஏமாற வேண்டாம் என்றனர். கைது செய்யப்பட்டுள்ள ஜான் ராஜ் ஐ.டி.ஐ. படித்து எலக்ட்ரீசியனாக வேலை பார்க்கிறார். சுரேஷ் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இருவரும் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு மண்ணுளி பாம்பை பிடித்து விற்க முயன்றதாக கூறி உள்ளனர். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாளையில் கள்ளக்காதலனுடன் ஓடிய இளம்பெண் வெட்டிக்கொலை: கணவர் வெறிச்செயல்!!
Next post கணவன் கண்முன்பே மனைவி கற்பழிப்பு: தலைமறைவாக இருந்த மேலும் ஒரு வாலிபர் இன்று கைது!!