விரல் அசைவில் மின் சாதனங்களை உயிர்ப்பிக்கும் ஜீபூம்பா மோதிரம்: வீடியோ இணைப்பு!!

Read Time:2 Minute, 23 Second

25320121-75ba-48f1-91dc-1aec9513cc9d_S_secvpfபட்டணத்தில் பூதம் படத்தில் வரும் பூதம் ஒரு சிறிய விரலின் அசைவில் பல்வேறு மாயாஜாலங்களை செய்து குழந்தைகளை மகிழ்விக்கும். அதற்கு இணையான ஒரு ’ஜீபூம்பா’ மோதிரத்தை தற்போது ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். பார்வையிழந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த மோதிரம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த மோதிரத்தை விரலில் மாட்டிக் கொண்டு நீங்கள் என்ன செய்ய விரும்புகின்றீர்களோ.., அதை விரலால் சுழற்றி காற்றில் எழுதினால் போதும். விளக்குகள் எரிய வேண்டுமா? இதோ ’பளிச்’. இசையை கேட்க வேண்டுமா? ‘கேட்டுக்கோடி உருமி மேளம்.., போட்டுக்கோடி கொகோ தாளம்’. டி.வி.யை ஆன் செய்ய வேண்டுமா? ’இத்துடன் செய்திகள் முடிவடைந்தன. மீண்டும் நாளை காலை 7 மணி செய்தியில் சந்திப்போம். நன்றி, வணணணக்க்க்கம்ம்ம்’.

இதேபோல், உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்ய வேண்டுமா? கைபேசியை எதிரே வைத்துக் கொண்டு யாருக்கு, எவ்வளவு தொகை அனுப்ப வேண்டும் என விரல் நுனியை அசைத்து கட்டளையிட்டால் நொடிப்பொழுதில் அது நிறைவேறி விடும்.

இத்தனை சிறப்பம்சங்களுடன் கூடிய நவீன மோதிரத்தை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த மோதிரம் ‘வைப்ரேட்டிங் சென்சார்’ என்ற அதிர்வலைகளை உள்வாங்கி கொண்டு விரலசைவின் கட்டளைகளுக்கு ஏற்ப கட்டுப்பட்டு செயல்படுவதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலியல் புகாருக்கு ஆளான பச்சோரிக்கு மீண்டும் முன் ஜாமின்: போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தல்!!
Next post ரூ.3½ கோடி கஞ்சா எண்ணெயுடன் கேரள வாலிபர்கள் 2 பேர் கைது!!