போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த, “புலிவால்” மாபியாக்கள்; “இனியொரு”விற்குக் கொலை மிரட்டல்..!!

Read Time:5 Minute, 18 Second

timthumb (4)ஈழ மக்களின் உயிரைக் குடித்து மக்களையும், போராளிகளையும் காட்டிக் கொடுத்த இரத்தக் காட்டேரிகள் இன்றும் நமக்கும் மத்தியில் கொலை வெறியோடு உலா வருகின்றன. இளைய சமூகத்தைப் பாலியல் வக்கிரங்களுக்கும், வன்முறைக்கும் பலியாக்கும் இக் கொடியவர்கள் எமது சமூகத்தின் விச வேர்கள்.

நவீன தகவல் தொழில் நுட்பத்தையும், இணையச் சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளும் இச் சமூகவிரோதிகள் “சனல்4 கலம் மக்ரே” இனியொருவிற்கு வழங்கிய நேர்காணலைத் தொடர்ந்து தமது மஞ்சள் பத்திரிகைப் பாணியில் அவதூறுகளை அள்ளிவீச ஆரம்பித்தனர். பொய்ச் செய்திகளை வெளியிட்டு “மக்கள் பார்த்துக் கொள்வார்கள்” என பொது வெளியில் முதலில் மிரட்ட ஆரம்பித்தனர்.

புலிகளையும், பிரபாகரனையும் மட்டுமே வைத்துப் சோற்றுக்காகப் பிழைப்பு நடத்தும் இக்கொடியவர்கள் பெரும்பாலும் இலங்கை இனப்படுகொலை அரசோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புகளை வைத்திருப்பவர்கள்.

தாமும் தமது உறவினர்களும் சுருட்டிக்கொண்ட பெரும் தொகைப் பணத்தைப் பாதுகாப்பதற்காகப் புலிகள் இயக்கத்தையும் போராளிகளையும் காட்டிக் கொடுத்த அதே நபர்கள் இன்று ‘பிரபாகரன் வாழ்கிறார்’ எனப் பிழைப்பு நடத்துகின்றனர். அவர்களுக்கு “சனல்4 கலம் மக்ரே” இனியொருவிற்கு வழங்கிய நேர்காணல் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இணையத்திலும் மின்னஞ்சலிலும் வெளியான கொலை மிரட்டலைத் தொடர்ந்து நேரடியாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. சிங்கள ஊடகங்கள் கலம் மக்ரே இன் நேர்காணலைப் பிரசுரித்திருப்பதாகப் பொய்ச் செய்தி பரப்பப்பட்டது.

சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சமூகத்திலிருந்து இவர்கள் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை “இனியொரு”வும் வாசகர்களும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்கான நடவடிக்கைக்காக பலரிடமிருந்து முழுமையான ஆதரவும், பங்களிப்பும் கிடைத்துள்ளமை எமது சமூகத்தில் சமூக நோக்கும், மக்கள் பற்றும் உள்ளவர்கள் இன்னும் எஞ்சியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றது.

தமிழ் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தை வன்னியில் வைத்துத் துடைத்தெறிவதற்குக் காரணமாயிருந்த இந்த வியாபாரிகள் நேற்று மகிந்தவின் மறைமுக நண்பர்கள். இன்று மைத்திரியின் நேரடி நண்பர்கள்.

தமது உயிர் எப்போதும் அழிந்து விடலாம் என்று தெரிந்து கொண்டே போராட்டத்துள் இணைந்து கொண்ட ஆயிரமாயிரம் போராளிகளின் உணர்வுகளை வியாபாரமாக்கிக் கொண்ட இக்கயவர் கூட்டத்திற்குப் புலிகளின் அடையாளம் வெறும் வியாபாரம்.

மக்களின் கண்ணீரைப் விற்பனை செய்து வயிற்றுப் பிழைப்பு நடத்தும் இக் குள்ள நரிகள் புலம்பெயர் நாடுகளிலிருந்து பணத்திற்காக ஊழையிடும் போது ஈழத்தில் மக்களின் மனங்களில் இரத்தம் வடிகின்றது.

“சனல்4 கலம் மக்ரே” இன் நேர்காணல் ஒலி வடிவில் எந்த மாற்றமும் செய்யாமல் இனியொருவில் பதிவு செய்யப்பட்ட பின்னர் பதற்றமடைந்த இந்த மாபியக் கும்பல் தமது ‘மஞ்சள் ஊடகத்தின்’ ஊடாக பொய்ப் பிரச்சாரங்களை ஆரம்பித்தன. கீழே அரை நிர்வாணப் நடிகைகளின் படங்கள் தொங்கிக் கொண்டிருக்க மேலே அவதூறு வெளியிடப்பட்டு பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டது.

பல்வேறு செக்ஸ் இணையங்களை நடத்திவரும் இந்த மாபியா வலையமைப்பின் பணக் கையாடல்கள், கொலை மிரட்டல்கள் போன்றன சட்டரீதியான அணுகப்படும். அப்பாவி மக்களின் பணத்தைச் சுருட்டிக் கொண்ட இந்த ஆசாமிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் அடுத்த கட்டத்தை அடைந்தவுடன் மாபியா வலையமைப்பின் முழு விபரங்களும் அடுத்தவாரமளவில் வெளியாகும்.

நன்றி…. “இனியொரு”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெரினா கடற்கரையில் போலீஸ் போல் நடித்து பைக் திருட முயன்ற வாலிபர் நண்பருடன் கைது!!
Next post லக்சம்பர்க் நாட்டின் அதிகாரப்பூர்வ தூதரான நடிகை..!!