வேறொருவருக்கு கழுத்தை நீட்ட சம்மதித்த காதலியை குத்திக் கொன்று வாலிபர் தற்கொலை!!

Read Time:1 Minute, 51 Second

be6f72ac-b5ab-49e9-b991-b00aba8d9ed6_S_secvpfகுஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வேனாப் கிராமத்தை சேர்ந்த மனாபாய் தாக்கோர்(22) என்பவர் அதே கிராமத்தில் வசித்த தங்கள் சாதியை சேர்ந்த டரியா தாக்கோர்(18) என்ற பெண்ணை சுமார் ஓராண்டு காலமாக காதலித்து வந்தார்.

ஆனால், இந்த காதலை இரு குடும்பத்தாரும் எதிர்த்து வந்த நிலையில், சமீபத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் வேறொரு இடத்தில் அவருக்கு சம்பந்தம் பேசி முடிவு செய்தனர். இதற்கு டரியா தாக்கோரும் சம்மதித்து விட்டதாக மனாபாய்க்கு தெரியவந்தது.

மனம் உடைந்துப் போன அவர் கடைசியாக ஒரேயொரு முறை தன்னை வந்து சந்திக்குமாறு டரியாவுக்கு தூது அனுப்பினார். இன்று தனிமையானதொரு இடத்தில் இருவரும் சந்தித்து கொண்டனர். சற்றும் எதிர்பாராத நிலையில் பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை உருவிய மனாபாய், டரியாவை மனம்போன போக்கில் குத்திக் கொன்றார். பின்னர், அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார், இரு பிரேதங்களையும் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏற்காட்டில் கணவன்–மனைவி கொலை: சொத்து தகராறில் தீர்த்து கட்டிய கொடூரம் அக்காள் மகனிடம் விசாரணை!!
Next post வரதட்சணை தந்து காதலனை திருமணம் செய்த திருநங்கை: கணவன் கைவிட்டதாக போலீசில் புகார்!!