வரதட்சணை தந்து காதலனை திருமணம் செய்த திருநங்கை: கணவன் கைவிட்டதாக போலீசில் புகார்!!

Read Time:3 Minute, 0 Second

3ebff43e-5d67-4e3f-ba88-143935a7b343_S_secvpfகண்ணுக்கு அழகாக தோன்றிய காதலனுக்கு 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், புல்லட் மோட்டார் சைக்கிள், விலையுயர்ந்த செல்போன் உள்ளிட்ட பொருட்களை வரதட்சணையாக தந்து திருமணம் செய்து கொண்ட ஒரு திருநங்கை, அந்த கணவன் தன்னை கைவிட்டு வேறொரு பெண்னுடன் ஓடிப்போனதாக தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூர் நகரை சேர்ந்த பூஜா என்ற திருநங்கை தனக்கு அறிமுகமான ஜான் என்ற வாலிபரை உயிருக்குயிராக காதலித்தார். பூஜா உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஒரு திருநங்கை என்பதை நன்கு அறிந்திருந்த ஜானும் பூஜாவுடன் உல்லாசமாக சில மாதங்களை கழித்தார்.

பின்னர் ஜானையே திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ எண்ணிய பூஜா, தனது விருப்பத்தை ஜானிடம் தெரிவித்தார். ஜானும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே, பூஜாவுடன் ஜானுக்கு கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

வரதட்சணையாக 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், திருமண சீர்வரிசையாக புல்லட் மோட்டார் சைக்கிள், விலையுயர்ந்த செல்போன் மற்றும் இதர பொருட்கள் உள்பட அனைத்தையும் பெற்றுக் கொண்ட ஜான் சுமார் இரண்டாண்டுகள் வரை பூஜாவுடன் குடும்பம் நடத்தினார்.

பின்னர், இன்னொரு ‘பெண்ணை’ காதலிக்க தொடங்கிய ஜான், பூஜாவின் வீட்டுக்கு வருவதை தவிர்த்தார். இது தொடர்பாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட தொடங்கியது. கடந்த 2013-ம் ஆண்டு அந்த புதுக்காதலியுடன் ஜான் தலைமறைவாகி விட்டார்.

சுமார் ஓராண்டுக்கு மேலாக தேடியும் ஜானைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் வெறுத்துப்போன திருநங்கை பூஜா, கிழக்கு சிங்பங் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஜானுக்கு கொடுத்த வரதட்சணை பணம், சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் அவருக்காக செலவு செய்த தொகையை எனக்கு வாங்கித் தாருங்கள். அவர் யாருடனாவது வாழ்ந்துக் கொள்ளட்டும் என தனது புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேறொருவருக்கு கழுத்தை நீட்ட சம்மதித்த காதலியை குத்திக் கொன்று வாலிபர் தற்கொலை!!
Next post வாட்ஸ் அப் மூலம் கற்பழிப்பு காட்சிகளை அனுப்பிய விவகாரம்: ஒருவரை கைது செய்தது சி.பி.ஐ.!!