வாட்ஸ் அப் மூலம் கற்பழிப்பு காட்சிகளை அனுப்பிய விவகாரம்: ஒருவரை கைது செய்தது சி.பி.ஐ.!!

Read Time:1 Minute, 46 Second

3c306929-92f7-40ec-9320-64c2b1b682af_S_secvpfவாட்ஸ் அப் மூலம் கற்பழிப்பு காட்சிகளை பரவ விட்டது தொடர்பாக ஒரு ஆசாமியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

‘வாட்ஸ் அப்’ வாயிலாக கடந்த மாதம் பரவிய 2 கற்பழிப்பு காட்சி வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்களை கற்பழித்த நபர்கள், கேமராவைப் பார்த்து சிரித்து மகிழ்ந்த அந்த காட்சிகளைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் வீடியோ ஆதாரத்துடன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எல்.எல்.தத்துவுக்கு கடிதம் அனுப்பியது.

இதையடுத்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இதனை ஒரு வழக்காக எடுத்து விசாரித்தது. கடந்த வாரம், இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, தீவிர விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், இதுதொடர்பாக இன்று ஒருவரை கைது செய்துள்ளனர். இவரிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவில் மேலும் சிலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கற்பழிப்பு வீடியோவில் உள்ள நபர் ஒடிசாவைச் சேர்ந்த சுப்ரதா சாகு என அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வரதட்சணை தந்து காதலனை திருமணம் செய்த திருநங்கை: கணவன் கைவிட்டதாக போலீசில் புகார்!!
Next post டெல்லியில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்திருந்த தையலக மேனேஜர் கைது!!