திருப்பதி கோவிலில் உண்டியல் பணத்தை திருடிய வாலிபர் கைது!!

Read Time:1 Minute, 30 Second

8d488650-42db-4461-b49f-3316093c91c7_S_secvpfதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்க வாயில் அருகே சம்பங்கி பிரகாரத்தில் 3 நடமாடும் உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது.

மூலவரை தரிசித்து வெளியே வரும் பக்தர்கள் இந்த உண்டியலில் காணிக்கை செலுத்துவது உண்டு.

நேற்று முன்தினம் இரவு இந்த உண்டியலில் ஒன்று நிரம்பி வழிந்தது. அப்போது தர்ம தரிசன வரிசையில் வந்த இளைஞர் ஒருவர் உண்டியலில் கையை விட்டு பணத்தை திருடினார்.

இந்த காட்சி கண்காணிப்பு கேமிராவில் பதிவானது. இதனை பார்த்த விஜிலென்ஸ் அதிகாரிகள் உடனடியாக உண்டியல் இருந்த பிரகாரத்தில் நின்ற பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பாதுகாப்பு படையினர் அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்தனர்.

அவனிடம் இருந்து ரூ.17,300 பறிமுதல் செய்யப்பட்டது. அவனை போலீசார் கைது செய்தனர். கைதான வாலிபர் பெயர் சிவா ரெட்டி. நெல்லூரை சேர்ந்தவர்.

இவன் ஏற்கனவே 3 முறை உண்டியல் பணத்தை திருடி போலீசாரால் கைது செய்யப்பட்டவன் என்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நஷ்டஈடு விவகாரத்தில் ரஜினிக்கு கமல் ஆதரவு!!
Next post தலித் பெண் மந்திரி பற்றி தரக்குறைவான பேச்சு: ரோஜா மீது வன்கொடுமை வழக்கு!!