உ.பி தொடர் கொடூரம்: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 7 வயது சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

Read Time:1 Minute, 49 Second

41db923c-ef2f-4e4d-9f68-8a3e463ddd02_S_secvpfஉத்திரப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, நேற்று 7 வயது சிறுமி, பக்கத்து வீட்டுக்காரனால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புலந்த்ஷர் மாவட்டத்தின் குர்ஜா பகுதியில் உள்ள கிர்ரா என்கிற கிராமத்தில் வசித்து வரும் பால்மிகி, தனது பக்கத்து வீட்டிலுள்ள 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டாள். தற்போது, தீவிர சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், சிறுமியை மருத்துவ சிகிச்சைக்காக மீரட் நகருக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் மூத்த காவல் கண்காணிப்பாளர் திவாரி தெரிவித்துள்ளார்.

இந்த கொடூர செயலுக்கு காரணமான பால்மிகி தலைமறைவாகி விட்டதாகவும், ஏற்கனவே, பதின்ம வயது வாலிபனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடர்புடைய அவனை கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலக நெடுஞ்சாலைகளை கலக்க வரும் பகுதிநேர தானியங்கி லாரிகள்: வீடியோ இணைப்பு!!
Next post 20 ரூபாய் தரமறுத்த வாலிபரை கத்தியால் குத்திக் கொன்ற கூல்டிரிங்ஸ் கடை உரிமையாளர்!!